ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விற்பனை அதிகரித்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொபைல் துறையில் முக்கிய நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
விலையுயர்ந்த பொருள்ளானாலும் இதற்கென்றே தனியாக நுகர்வோர் கூட்டம் இருந்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற பல முன்னேறிய நாடுகளின் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது.
அதேபோல இந்தியா, சீனா, பிரேசில், தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளிலும் பெரும் வரவேற்பை இந்நிறுவனம் பெற்றிருக்கிறது.
இதனால் தற்போது இதன் விற்பனை இரண்டிலக்க வளர்ச்சியை கண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவிக்கையில், “டிசம்பர் காலாண்டு முடிந்துள்ள நிலையில் எண்களின் சர்வதேச விற்பனை 5,600 கோடி டாலராக இருக்கிறது. இது முந்தையை ஆண்டைவிட 8 சதவிகிதம் அதிகமாகும்” என கூறியுள்ளார்.