Categories: சினிமா

ஆழ்கடலில் நடக்கும் யுத்தம்.! வெல்லப்போவது யார்? ‘அக்வா மேன் 2’ படத்தின் ட்ரைலர் வீடியோ இதோ.!

வெளியிட்டது

டிசி யூனிவர்சின் மிகப் பிரம்மாண்ட படைப்பான ‘அக்வா மேன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. ‘அக்வா மேன்’ படம் வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை ட்ரைலருடன் அறிவித்திருக்கிறது படக் குழு. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் டிசி யூனிவர்சின் ‘அக்வா மேன்’ இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை உலகம் எங்கிலும் பெற்றது. இதில் ஜாஸன் மோமோ, யாஹியா அப்துல் மதீன், நிக்கோல் கிட்மேன், பேட்ரிக் வில்சன் ஆகியோர் நடித்திருந்தனர். ட்ரைலர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் நடக்கும் யுத்தம்.! வெல்லப்போவது யார்? 'அக்வா மேன் 2' படத்தின் ட்ரைலர் வீடியோ இதோ.! 1
இந்த படம் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் குறித்து பார்க்கும் பொழுது ஜாஸன் மோமோ குரலில் வீடியோ தொடங்குகிறது. கணவனாக, தந்தையாக ஆழ் கடல் நகரமாக இருக்கும் அட்லான்டிஸின் அரசனாக இருக்கிறார் ஆர்தர் கர்ரி(அக்வா மேன்). முதல் பாகத்தில் பிளாக் மாண்டீஸ் என்ற பெயரில் அக்வா மேனால் வீழ்த்தப்பட்ட வில்லன் இந்த முறை ‘பிளாக் ட்ரிடன்ட்’ என்கிற பெயரில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் அக்வா மேனுக்கு வில்லனான ஓசன் மாஸ்டரும் இரண்டாம் பாகத்தில் அக்வா மேனுடன் சேர்ந்து புதிய வில்லனை விரட்ட தயாராகிறார்கள்.


மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள இந்த படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. தற்போது தமிழிலும் வெளியாகியிருக்கும் அந்த ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Warner Bros. India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்