Categories: சினிமா

“நடந்த தவறுகளுக்கு நானே பலிகடா ஆகிறேன்” உருக்கமாக பதிவிட்ட ஏ.ஆர். ரகுமான்.!

வெளியிட்டது

சென்னையில் நடந்த ஏ ஆர் ரகுமான் கச்சேரியில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு ஏ ஆர் ரகுமான் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், “நடந்த தவறுகளுக்கு நானே இந்த முறை பலிகடா ஆகிறேன்” என்று சொல்லி அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி சென்னையில் நேற்று நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதமே ‘மறக்குமா நெஞ்சம்’ என்கிற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. காலி சேர்களுடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்த ஏ.ஆர் ரகுமான் மழையால் கச்சேரி நின்று விட்டதை வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று அந்த விழா மீண்டும் நடைபெற்றது.

செப்டம்பர் பத்தாம் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்கு மழை வந்தாலும் நடத்துவோம் என்று கூறியிருந்த ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு ரெயின் கோட் ஒன்றையும் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் சென்னை பனையூர் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் பெண்களிடம் பலர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. பலரும் நிகழ்ச்சிக்காக வாங்கிய டிக்கெட்டுகளை கிழித்தெறிந்து கோபத்துடன் வெளியேறினர். மேலும் நிகழ்ச்சிக்கு வரும் வழியில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் கான்வாயும் இணைந்து கொண்டதால் கூட்ட நெரிசல் இன்னும் அதிகமானது.

 

இந்த நிலையில் டிக்கெட் இருந்து எங்களுக்கு மீண்டும் பணத்தை திருப்பி தருமாறு ஏ ஆர் ரகுமானிடம் கேட்டு பலரும் சமூக வலைதளத்தில் பதிவிடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து பதிவிட்டுள்ள ஏ.ஆர் ரகுமான், “அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கி தவிர்க்க முடியாத காரணத்தால் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்கள் டிக்கெட் காப்பியை arr4chennai@btos.in என்கிற மெயிலுக்கு அனுப்புங்கள். எங்கள் குழுவினர் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று பதிவிட்டு இருந்தார். தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

"நடந்த தவறுகளுக்கு நானே பலிகடா ஆகிறேன்" உருக்கமாக பதிவிட்ட ஏ.ஆர். ரகுமான்.! 1

அதில், “சிலர் என்னை ஆடு என்று அழைக்கிறார்கள். மக்கள் விழித்தெழுவதற்காக இந்த முறை நான் பலியாடு ஆகிறேன். மிகப்பெரிய விழாக்கள் நடத்தவும், இசைக்கச்சேரிகள் நடத்துவோம் ஏதுவாக சென்னையின் தரத்தை மாற்றி அமைக்கமாறும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இறைவன் நாடினால் நடக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். பலர் ஏ.ஆர் ரகுமானுக்கு ஆதரவாகவும், சிலர் ஏ ஆர் ரகுமானுக்கு எதிராகவும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்