சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி ஆதரவற்ற மக்களின் விடுதிக்காக உணவுகளை சமைத்து எடுத்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது சரியாக குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் காரில் வந்து இறங்குகின்றனர். அவர்களை ஏமாற்றிவிட்டு உணவுகளை எடுத்து செல்கிறார் நந்தினி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் மூன்றாவது மருமகளாக இருக்கும் நந்தினி வீட்டில் சமைத்து சமைத்து நன்றாக சமைக்க தொடங்கி விடுகிறார். எனவே அவருக்கு நான்காவது மருமகள் ஜனனி ஆதரவற்ற முதியவர்கள் வாழும் இல்லத்தில் உணவு சமைக்க காண்ட்ராக்ட் எடுத்துக் கொடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பழைய காண்ட்ராக்ட் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால் இன்று முதல் நந்தினி சமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் வீட்டில் இருக்கும் ஆண்களை எப்படி சமாளித்து அவர் உணவை சமைத்துக் கொண்டு போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் உணவுகளை சமைத்து காரில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரியாக ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் காரில் வந்து இறங்குகின்றனர். அவர்கள் உணவுகளை சமைத்து எங்கு எடுத்துக் கொண்டு போகிறாய் என்று கேட்க, கோவிலுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்கிறேன் என்று நந்தினி பதிலளிக்கிறார். ஆனால் அவரது பதிலில் திருப்தி இல்லாத ஆதி குணசேகரன் அவரது தாயாரிடம் வந்து சண்டை போடுகிறார்.

இவர்கள் செய்வது எனக்கு என்னமோ சரியாகப்படவில்லை. என்னவென்று கேட்டு சொல்லு என தனது தாயிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் ஆதி குணசேகரன். அப்போது வெளியில் இருந்து ரேணுகாவும் ஈஸ்வரியும் சைகை மூலம் விசாலாட்சியிடம் ஏதோ செய்து காட்டிக் கொண்டிருக்கிறனர். அதை விசாலாட்சி புரிந்து கொண்டு சமாளிக்க முயற்சி செய்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV