விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு தனி சிறப்பு இருக்கும் என்றால் அதற்கு காரணம் பாக்கியலட்சுமி தொடர் தான். இந்த தொடரின் மூலம் பல ரசிகர்களையும் விஜய் டிவி ரசிகர்களாக தனது வசம் இழுத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் கதையை இயக்குனர் நேர்த்தியாக கொண்டு சென்று அசத்தி வருகிறார். இதனால் இந்த தொடரின் எதிர்பார்ப்பு ஆனது ரசிகர்களிடம் அதிகரித்து கொண்டே வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், சமையல் போட்டி நடப்பதை கோபி மற்றும் பாக்கியா தெரிந்துகொண்டு அதில் போட்டியிடுகின்றனர். போட்டிக்கு பாக்கியா உடன் வரும் ஈஸ்வரியை கண்டு கோபி ஆசீர்வாதம் வாங்க முயற்சி செய்கிறார். இதனால் கடுப்பாகிய ஈஸ்வரி, போட்டியில் தனது மருமகள் தான் வெற்றிபெறுவார் என கூறுகிறார்.

மேலும் பாக்கியாவை பார்த்த கோபி, நீயெல்லாம் என்னுடன் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது எனவும், இந்த போட்டியில் ஜெயிப்பது நான் தான் என பாக்கியாவை எதிர்த்து கடுமையாக போட்டி இடுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. மேலும் ரசிகர்கள் பாக்கியாவுக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION