குரங்குபொம்மை படத்தினை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் நித்திலன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் இவருடன் நட்ராஜன் , சிங்கம் புலி மற்றும் முனீஷ்காந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பி இருந்தது.

இப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. மேலும் வசூலிலும் பல கோடிகளை குவித்து இருந்தது. இப்படத்தினை பார்த்த நடிகர் விஜய் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். இதுகுறித்து இயக்குனர் நித்திலன் தனது எக்ஸ் பக்கத்தில் புகைபடம் வெளியிட்டு நடிகர் விஜய்க்கு நன்றி கூறி உள்ளார்.

அந்த பதிவில், அறிவூட்டும் வகையில் இருந்த இந்த சந்திப்பிற்கு நன்றி. உங்களை சந்திக்க கிடைத்த இந்த வாய்ப்புக்கு நன்றி. மகாராஜா பற்றி நீங்கள் பேசிய விஷயங்களை கண்டு அசந்துவிட்டேன் என கூறி தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dear @actorvijay anna..
Thank you for this enlightening meeting. I am grateful to have the chance to meet you. I am flattered by the details you have spoken about the #Maharaja. it is a great appreciation for me. I am very thankful for your love, support, and encouragement. Love… pic.twitter.com/kSgbswqr4H— Nithilan Saminathan (@Dir_Nithilan) July 18, 2024