விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த தொடருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் வில்லியாக நடிக்கும் பார்வதி கதாபாத்திரத்திற்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம். அந்தளவுக்கு தனது நடிப்பால் அசத்தி வருகிறார் ஆர்த்தி சுபாஷ். தற்போது கண்ணனை திருமணம் செய்துகொண்டு வரும் பல்லவி அனைவரையும் ஆட்டி படைக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது திருந்தி இருப்பதாக கூறி உள்ளார். இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், திருந்திய பல்லவியை வீட்டில் உள்ள அனைவரும் படாதபாடு படுகின்றனர். அதனை பொறுத்துக்கொண்டு இருக்கும் பல்லவி, கண்ணன் திட்டியதால் கோபத்தில் வீட்டை விட்டு கிளம்ப முடிவு செய்கிறார். அழுதுகொண்டே வீட்டை விட்டு கிளம்புகிறார் பல்லவி.

பல்லவியை பார்வதி தடுத்து நிறுத்துகிறார். ஆனால் பல்லவி கேட்காமல் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என கூறுகிறார். இதனால் வீட்டில் பரபரப்பு நிகழ்கிறது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் பல்லவி தனது ஆட்டத்தை தொடங்கினாள் வீடு தாங்காது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION