Categories: சினிமா

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி அறிவிப்பு..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏஆர் ரஹ்மான். இவரின் இசைக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இரண்டு ஆஸ்கர்களை வென்று சாதனை படைத்த ஒரே இந்தியர் என்ற சாதனையை படைத்தவர் இவர். தொடர்ந்து பல படங்களிலும் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி அறிவிப்பு..! 1

திருமணமாகி 29 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ரஹ்மான் மற்றும் சயீராவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் மகன்கள் உள்ளனர். தற்போது இவர்களது விவாகரத்து அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சயீரா பானு வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும் இடைவெளி உருவாகி உள்ளது.ஆழமான யோசனைக்கு பின்னரே பிரிவதாக முடிவு எடுத்து உள்ளோம்.

இந்த சவாலான தருணத்தில் எங்களது தனிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என கூறி உள்ளார். இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளியிட்டது

புதிய செய்திகள்