பள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். சினிமாவில் எளிதாக அறிமுகமாகி இருந்தாலும் வெற்றி என்பது இவருக்கு எட்டாமல் இருந்தது. தொடர்ந்து சினிமாவில் வெற்றிபெற போராடிய இவருக்கு தோல்விகள் மட்டுமே பரிசாக கிடைத்து இருந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் இவரின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்டது.

பள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அருண்விஜய் 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அருண்விஜய். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான யானை மற்றும் மிஷன் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இதனை தொடர்ந்து இவர் ரெட்டை தலை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்து உள்ளது.

பள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அருண்விஜய் 3

விளம்பரம்

இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதன்படி இன்று பள்ளிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கி பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அருண் விஜய். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  மனம் கொத்தி பறவை படத்துல நடிச்ச இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க.!

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)

விளம்பரம்

Leave a Comment