Categories: சினிமா

குஷ்பூ, சிம்ரனின் பக்தி மயமான நடனத்தில் ‘அரண்மனை 4’ படத்தின் அம்மன் வீடியோ பாடல் வெளியானது.!

வெளியிட்டது

சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘அரண்மனை 4’ திரைப்படத்திலிருந்து அம்மன் பாடலின் முழு வீடியோ வெளியாகியிருக்கிறது. குஷ்பூ மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து பக்தி மயமாக நடனமாடி உள்ள இந்தப் பாடலின் முழு வீடியோ காட்சியை ரசிகர்கள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் ‘அரண்மனை’. தொடர்ந்து மூன்று பாகங்கள் வெளியான நிலையில் தற்போது நான்காவது பாகமும் உருவாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

குஷ்பூ, சிம்ரனின் பக்தி மயமான நடனத்தில் 'அரண்மனை 4' படத்தின் அம்மன் வீடியோ பாடல் வெளியானது.! 1
இந்தப் படத்தில் சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, கோவை சரளா, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஒன்பது நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானது. 10து நாள் முடிவில் ரூ.55 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் குஷ்பூ மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் இணைந்து ஆடிய அம்மன் பாடலின் வீடியோ காட்சி தற்போது வெளியாகியிருக்கிறது.

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டரின் கோரியோகிராபியில், சூப்பர் சிங்கர் சீசன் 7 டைட்டில் வின்னர் அருணாவின் குரல்களில், ஹிப்ஹாப் தமிழா இசையில் இந்த பாடல் உருவாகி இருந்தது. பக்திமயமாக உருவாகியுள்ள அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! 

YouTube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்