Categories: சினிமா

இதுக்கு இல்லையா சார் எண்டு..! அரண்மனை 5 எடுக்க தயாராகிய சுந்தர் சி..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அசத்தி வருபவர் சுந்தர் சி. இவரின் இயக்கங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து உள்ளார். சூப்பர் ஸ்டாரை வைத்து இவர் இயக்கிய அருணாச்சலம் இன்று வரை ரசிகர்களுக்கு விருப்பமான படமாக அமைந்து இருக்கிறது.மேலும் இவர் இயக்கத்தில் வெளியான வின்னர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது.

இதுக்கு இல்லையா சார் எண்டு..! அரண்மனை 5 எடுக்க தயாராகிய சுந்தர் சி..! 1

தற்போது இவர் 15ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான தலைநகரம் மற்றும் நகரம் போன்ற படங்கள் மாபெரும் ஹிட் அடித்து உள்ளது.இதனை தொடர்ந்து தற்போது கேங்கர்ஸ் என்ற படத்தில் இணைந்து நடித்து உள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தினை இயக்க உள்ளார்.

இப்படங்களை முடித்துவிட்டு சுந்தர் சி மீண்டும் அரண்மனை படத்தின் 5வது பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இயக்கி நடித்து ஹிட் ஆகிய நான்கு பாகங்களை தொடர்ந்து தற்போது 5வது பாகத்தை இயக்க திட்டமிட்டு உள்ளார். நவம்பர் அல்லது டிசம்பரில் இப்படத்தினை தொடங்கி, கோடை விடுமுறையில் வெளியிட தயாராக உள்ளார் சுந்தர் சி.

வெளியிட்டது

புதிய செய்திகள்