திருச்சியில் இருந்து சென்னைக்கு உதவ சென்ற அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த கொடுமை.!

வெளியிட்டது

சென்னை புயலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக சென்ற அறந்தாங்கி நிஷாவுக்கு நேர்ந்த சோகம் குறித்து தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். உதவி கேட்டு பலரை அழைத்தும் தங்களுக்கு உதவி மறுக்கப்பட்டதாக அவர் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். டிசம்பர் மாதம் வந்தாலே சென்னைக்கு பல பிரச்சனைகள் ஏற்படுவது சகஜமாக இருக்கிறது. குறிப்பாக புயல் பாதிப்பால் ஏற்படும் வெள்ளம் சென்னையை ஒரு புரட்டு புரட்டிப் போடுறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கிறது சென்னை. திமுக அரசு அமைந்த பின்னர் பல வடிகால் பணிகளை மேற்கொண்ட போதிலும், பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கிய நிலையே காணப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.! 

திருச்சியில் இருந்து சென்னைக்கு உதவ சென்ற அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த கொடுமை.! 1

பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கடைகள் திறக்கப்படவில்லை. குழந்தை வைத்திருப்பவர்கள் பாலுக்கு கூட அல்லல் படும் நிலைமை இருக்கிறது. தூங்குவதற்கு இடம் இல்லை, கொசுக்கடி, பாம்பு, பல்லி, பூச்சி என வீட்டிற்குள் வருவதால் சென்னை மக்கள் நிம்மதி இழந்து காணப்படுகின்றனர் அவர்களுக்கு தேவையான உதவியை வழங்க அரசு பலகட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதே போல நடிகர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் அறந்தாங்கி நிஷா. திருச்சியில் இருக்கும் இவர் சென்னை மக்களுக்கு உதவுவதற்காக தண்ணீர் மற்றும் உணவு பொட்டலங்களுடன் காரில் ஏறி பயணம் செய்திருக்கிறார்.


இது குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், “சென்னையில் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காக பல இடங்களில் கார் மற்றும் வேன் வாடகைக்கு கேட்டோம், ஆனால் சென்னை என்பதால் யாருமே வண்டி வாடகைக்கு தர முன் வரவில்லை, எனவே ஒரு சிறிய காரை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு அதில் உட்காரக்கூட இடமில்லாமல் பொருட்களை ஏற்றி வந்துள்ளோம். தாம்பரத்தில் ஆயிரம் பேருக்கு உணவு சமைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். எனவே உதவி செய்வதற்கு வாகனங்களை கொடுத்து உதவுங்கள், உங்கள் வாகனம் ஒன்றும் வெள்ளத்தில் மூழ்கி விடாது” என்று அவர் அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்