பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் கதிரை ரவுடிகள் கத்தியால் குத்தி விடுகின்றர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகள் நால்வரின் ஒற்றுமையை குறித்து இந்த நாடகம் பேசி வருகிறது. ஆனால் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் சண்டைகளையும் அவ்வப்போது காட்டி வருகிறது. அப்படி தான் தற்போது நான்கு பேரில் ஒருவரான கதிர் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். மளிகை கடையே கதி என இருந்த கதிருக்கு வேறு எந்த ஒரு தொழிலும் தெரியாது.

தனது மனைவியின் குழந்தையின்மை மருத்துவத்திற்காக அவர் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருப்பார். அந்த கடன் பிரச்சனையால் அவர் வீட்டை விட்டும் வெளியேறி இருப்பார். வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவருக்கு எந்த தொழில் செய்வது என்று தெரியாமல் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்து வருவார். பின்னர் முல்லை கொடுத்த ஐடியாவால் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார் கதிர். ஆனால் ஹோட்டல் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக ஓடவில்லை. இதனால் முல்லை ஒரு சமையல் போட்டியில் கலந்து கொள்ள கதிரை வற்புறுத்துகிறார்.

அதில் கிடைக்கும் 10 லட்சம் ரூபாயை வைத்து கடனை அடைத்து விட்டு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைந்து விடலாம் என்றும் ஐடியா கொடுக்கிறார். அதை ஒப்புக் கொண்ட கதிர் போட்டியில் கலந்து கொள்கிறார். அங்கு சில ரவுடிகள் தொடர்ந்து கதிர் முல்லையிடம் பிரச்னை செய்து வருகின்றனர். தற்போது கதிரை ஒரு ரவுடி கத்தியால் குத்தி விட்டார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television