அறந்தாங்கி நிஷா தற்போது தனது தம்பியின் பிறந்த நாளுக்காக புதிதாக பைக் ஒன்றை வாங்கி அவருக்கு பரிசாக அளித்து இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பெண் காமெடியர்கள் மிகக் குறைவாக இருந்தபோது, தனி ஒரு பெண்ணாக நின்று காமெடி செய்து இன்று உயர்ந்திருப்பவர்களில் ஒருவர்தான் அறந்தாங்கி நிஷா. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் பட்டிமன்ற பேச்சாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் நன்றாக காமெடி செய்யும் திறமை இருப்பதால் இவரது மாமியார் மற்றும் கணவரின் உந்துதலால் அவர் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு ஆடிஷனுக்கு வந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது திறமையால் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறார். இன்று கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 என்கிற நிகழ்ச்சியின் நடுவராகவும் அவர் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தன்னை பிறர் எவ்வளவு கலாய்த்தாலும் அதை சிரித்துக்கொண்டே கடந்து விடும் மனப்பாங்கு இருப்பதால் அறந்தாங்கி நிஷாவை பலருக்கும் பிடித்துப் போனது. இதனால் குறுகிய காலத்திலேயே அவருக்கு படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாரி 2 என்கிற படத்தில் முதன்முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமா ராஜா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியை ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார். பின்னர் அவர் பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. பின்னர் பிக் பாஸில் கலந்து கொண்ட அவர் பாதியிலேயே வெளியேறினார். வெளியே வந்த பின்னர் ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம், ட்ரிகர் போன்ற பல படங்களின் நடித்திருக்கிறார். தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெய்லர் படத்திலும் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே அவர் திருச்சியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கி கட்டி அதன் கிரகப்பிரவேச நிகழ்ச்சிகளை வீடியோவாக வெளியிட்டு இருந்தார். சிறிய வீடாக இருந்தபோதிலும் பார்த்து பார்த்து வீடை கட்டி முடித்து இருந்தார் அறந்தாங்கி நிஷா. அந்த வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்த நிலையில், தற்போது தனது தம்பியின் பிறந்தநாளுக்காக பைக் ஒன்றை வாங்கி அதை பரிசாக அளித்திருக்கிறார். திருச்சியில் இருந்து தனது கணவருடன் பைக்கிலேயே சென்ற அவர் தனது தம்பிக்கு அந்த பரிசை கொடுத்திருக்கிறார்..! நெகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் காமெடியாகவும் அந்த வீடியோ வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Karuppu Roja