இறுதி கட்ட பணிகளில் PS டீம்.! நாளை ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு.!

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ட்ரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. இந்த வீடியோவில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் என அனைவரும் டப்பிங் பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான் என அனைவரும் மும்முரமாக இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எடிட்டிங் செய்யும் குழுவினர் உடன் பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை தற்போது ப்ரோமோ போல வெளியிட்டுள்ளனர் படக் குழுவினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சரித்திர நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மணிரத்தினம் தற்போது அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். சோழர்களின் வாழ்க்கை வரலாறை சில புனைவு கதைகளுடன் எழுதப்பட்ட நாவல் தான் பொன்னியின் செல்வன். தமிழில் அமைந்த இந்த பிரம்மாண்ட நாவலை படமாக்க வேண்டும் என்று எம்ஜிஆர் உள்ளிட்ட பலர் முயற்சி செய்து இறுதியில் தோற்றுப் போயிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதி கட்ட பணிகளில் PS டீம்.! நாளை ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு.! 1

விளம்பரம்

ஆனால் பல முன்னணி நடிகர்களை வைத்து கொரோனா காலகட்டத்திலும் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார் மணிரத்தினம். இரண்டு பாகங்களாக உருவாகியிருந்த இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா, த்ரிஷா என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியிருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி இருந்தது. தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் சுமார் 500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து இருந்ததாக கூறப்படுகிறது. பல ட்விஸ்ட்டுடன் முதல் பாகம் முடிக்கப்பட்டதால் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஏங்கி காத்துக் கிடந்தனர். இந்த நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி இரண்டாவது பாகம் வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். படத்தை தயாரித்த லைகா ப்ரொடக்ஷன்ஸ் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

தொடர்புடையவை  மீனா கணவர் எப்படி இறந்தார்ன்னு உங்களுக்கு தெரியுமா? கொஞ்சம் சமூக அக்கறையோடு இருங்க..மீடியாக்களை விளாசிய குஷ்பூ

இறுதி கட்ட பணிகளில் PS டீம்.! நாளை ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு.! 3
அந்த வகையில் நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடக்கும் என்ற அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இதற்கும் கமலஹாசனை சிறப்பு விருந்தினராக அழைக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. படத்தில் இருந்து அகநக என்கிற பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. தற்போது படத்தில் இருந்து அடுத்த அப்டேட் ஆக நாளை ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக இன்றைக்கு ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள், வல்லுனர்கள் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் டீம் பற்றி அந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tips Tamil

விளம்பரம்

Leave a Comment