அறந்தாங்கி நிஷா கட்டியுள்ள புது வீட்டில் இன்று பால் காய்ச்சும் விழா நடந்திருக்கிறது. சொந்தக்காரர்கள் அனைவரும் வந்து இந்த விழாவை சிறப்பித்திருக்கின்றனர். வீட்டிற்கு வந்த அனைவருக்கும் பிரியாணி சிக்கன் 65 விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் அறந்தாங்கி நிஷா. அந்த வீடியோவை தனது youtube சேனலில் அவர் பதிவேற்றி இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து படங்களில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்தவர் நிஷா. இவர் ஆரம்பத்தில் பட்டிமன்ற மேடைகளில் பேச்சாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னாளில் படங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பழனியுடன் இணைந்து கொண்டு இவர் செய்த காமெடிகள் மிகப் பிரபலமானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் முதன்முதலாக 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தையும் அவர் பிடித்திருந்தார். பின்னர் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் முதன் முதலாக மாரி 2 என்கிற படத்தில் நடித்தார். பின்னர் இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமா ராஜா போன்ற பல படங்களில் நடித்த இருக்கிறார். இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 1 ரக்ஷன் உடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அர்ச்சனா உடன் சேர்ந்து கொண்டு இவர் செய்த “அன்பு ஜெயிக்கும்” என்கிற வசனம் மிகப் பிரபலமானது. அதன் பின்னர் இவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பின்னர் ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம், ட்ரிகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது இயக்குனர் வசந்தபாலன் இயக்கம் ஒரு படத்திலும், ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்திலும் அவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். தற்போது அவர் திருச்சியில் ஒரு வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் மற்றும் பால் காய்ச்சும் வைபவம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த வீடியோக்களை அவர் தற்போது தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்தும் சிக்கன் 65 விருந்து வைத்தும் அவர் அசத்தியிருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Karuppu Roja