பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் விஜே அர்ச்சனாவின் வீட்டில் தற்போது வாராஹி அம்மன் பூஜை நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவை தற்போது அவர் தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சமீப காலமாக தமிழ்நாட்டில் வாராஹி அம்மன் பூஜை வழிபாடு பரவலாக காணப்படுகிறது. அதேபோல் அர்ச்சனாவும் தனது வீட்டில் அந்த அம்மனை வழிபட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். சென்னையை சேர்ந்த அர்ச்சனா ஆரம்பத்தில் தொலைக்காட்சி ஒன்றிய செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சன் தொலைக்காட்சிக்கு சென்ற அவர் இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 2004ஆம் ஆண்டு திருமணத்திற்கு பின்னர் அவர் திரைத்துறையில் இருந்து விலகினார். பின்னர் மீண்டும் 2009 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சிக்கு வந்த அவர் நம்ம வீட்டு கல்யாணம் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட போது அந்த டிவிக்கு சென்ற அவர் அதிர்ஷ்ட லட்சுமி என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார்.்அதன் பின்னர் அவர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்கிற குழந்தைகள் பங்கு பெற்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். பின்னர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து விலகி விஜய் டிவிக்கு சென்றார். பிக்பாஸ் சீசன் 4ல் ஒரு முக்கியமான போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அர்ச்சனா பலராலும் விமர்சிக்கப்பட்டார். அர்ச்சனாவில் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுகள் செயற்கை தன்மையாக இருப்பதாக பலரும் அவரை விமர்சித்தனர். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி மீண்டும் ஜீ தமிழ் திரும்பினார் அர்ச்சனா. தற்போது சரிகமப என்கிற பாட்டு பாடும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா ராகேஷ் லால் என்பவரை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரா என்கிற மகள் இருக்கிறார்.

சாராவும் தனது தாயுடன் இணைந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இவர் தனது வயதுக்கு மீது அதிகமாக பேசுகிறார் என்கிற விமர்சனம் இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த பாத்ரூம் டூர் மிகப் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. தொடர்ந்து அம்மாவும் மகளும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில் தற்போது அதெல்லாம் குறைந்து இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ள அவர்கள் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படி வராகி அம்மனுக்கு அவர்கள் தங்கள் வீட்டிலேயே செய்த பூஜை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Wow Life