Categories: சினிமா

“ஒரு டீ கூட குடிக்க முடில சார், அவ்ளோ டார்ச்சர்”!!நேரலையில் குமுறிய அறந்தாங்கி நிஷா கணவர்!!

வெளியிட்டது

அறந்தாங்கி நிஷா, இவருக்கு இப்பொது தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. பேர் கூறினாலே இவர் நமக்கு ஞாபகம் வந்து விடுவார். விஜய் டிவியின் பெருமைமிகு அறிமுகங்களில் ஐவரும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ஒரு டீ கூட குடிக்க முடில சார், அவ்ளோ டார்ச்சர்"!!நேரலையில் குமுறிய அறந்தாங்கி நிஷா கணவர்!! 1

அதன் பின் நிஷா பல நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிஷா சென்று இருந்தார். ஆனால், அவர் நெகட்டிவான கமெண்டுகள் உடன் தான் வெளியே வந்து இருந்தார். ஆனாலும், தன்னுடைய விடா முயற்சியை கைவிடாமல் யூடியூப் சேனல் தொடங்கி மக்கள் மத்தியில் மீண்டும் இடம் பிடித்து வருகிறார் நிஷா. தற்போது இவர் வெள்ளித்திரையிலும் நகைச்சுவை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய வெற்றிக்கு மிகப் பெரிய பலமே அவருடைய கணவர் கட்டத்துரை தான்.

இப்பொது ஒரு தொகுப்பாளராக, பட்டிமன்ற பேச்சாளராக, நகைச்சுவை கலைஞராக, யூடூபில் சிறந்த ஒரு சேனல் என பல்வேறு முகங்களுடன் சிறப்பாக மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார் அறந்தாங்கி நிஷா. இவரை போலவே நியூஸ் ரீடராக தன் வாழ்க்கையை துவங்கி இப்பொது விஜய் டிவியின் ஒரு முக்கிய செலிபிரிட்டியாக இருப்பவர் நடிகை அனிதா சம்பத். இருவரும் சமூகத்தில் நல்ல அறிமுகம் உடையவர்கள்.

இந்த நிலையில் அனிதா சம்பத் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவருமே தன் கணவருடன் இணைந்து நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றார்கள். தற்போது அதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கோபிநாத் பணியாற்றி வருகிறார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி.

Video Courtesy – VijayTelevision

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்