“கைதி 2” ஆரம்பிக்கலாங்களா!! ட்விட்டரின் மூலம் அறிவிப்பு விட்டுள்ள கைதி படத்தின் தயாரிப்பாளர்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆக்சன் படம் என்பதையும் உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"கைதி 2" ஆரம்பிக்கலாங்களா!! ட்விட்டரின் மூலம் அறிவிப்பு விட்டுள்ள கைதி படத்தின் தயாரிப்பாளர்!! 1

விளம்பரம்

மேலும் ’விக்ரம்’ படத்தில் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படத்தின் தொடர்புள்ள ஒருசில காட்சிகள் இருந்ததையும் படம் பார்த்தவர்கள் சரியாக கண்டுபிடித்து உள்ளனர். அதனால் தான் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ’கைதி’ படத்தை பார்த்துவிட்டு ’விக்ரம்’ படத்தை பாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இன்டர்லிங்க் கதைகளை கொண்ட படத்தை கொடுத்துள்ள லோகேஷ், இப்பொது கைதி படத்தையும், விக்ரம் படத்தையும் அடுத்து வெளிவரவிருக்கும் விக்ரம் 3 ஆகிய மூன்று படங்களை எவ்வாறு இணைக்க போகிறார் என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

விளம்பரம்
தொடர்புடையவை  எதுக்கு லேடி சூப்பர் ஸ்டார்ன்னு கூப்பிடனும்? நயன்தாராவை குறிப்பிட்டு சொன்னாரா மாளவிகா? இணையத்தில் எழுந்த எதிர்ப்பு.!

"கைதி 2" ஆரம்பிக்கலாங்களா!! ட்விட்டரின் மூலம் அறிவிப்பு விட்டுள்ள கைதி படத்தின் தயாரிப்பாளர்!! 3

2019ஆம் ஆண்டு வெளியான “கைதி” படத்தில் கார்த்தி, அர்ஜுன் தாஸ், நரேன், தீனா என பலர் நடிக்க தீபாவளி தினத்தன்று வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி, சிறந்த ஒரு ஆக்ஷன் என்டர்டைனராக உருவெடுத்தது. அப்போது படத்திலும் லோகேஷ், கைதி 2 ஆம் பாகத்திற்கான லீட் வைத்து படத்தை முடித்திருந்தார். இப்பொது கமலின் “விக்ரம்” படமும் அந்த கதையுடன் லிங்க் ஆவதால் விரைவில் இந்த படம் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இந்த நிலையில் ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கலாங்களா? என ‘கைதி’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’கைதி 2’ திரைப்படம் விரைவில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

"கைதி 2" ஆரம்பிக்கலாங்களா!! ட்விட்டரின் மூலம் அறிவிப்பு விட்டுள்ள கைதி படத்தின் தயாரிப்பாளர்!! 5

விளம்பரம்

இப்பொது அடுத்து இயக்குனர் விஜயுடன் ஒரு படத்தில் இணைய உள்ளதால் அந்த படம் முடிந்த கையேடு அவர் கைதி 2 படத்திற்கான வேலைகளை தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படம் முடிந்தவுடன் உடனே சூர்யா, கமல்,கார்த்தி கூட்டணியில் “விக்ரம் 3” படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  நடிகர் தனுஷ் பழனியில் சாமி தரிசனம்!!

"கைதி 2" ஆரம்பிக்கலாங்களா!! ட்விட்டரின் மூலம் அறிவிப்பு விட்டுள்ள கைதி படத்தின் தயாரிப்பாளர்!! 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment