பொருளாதாரம் மந்தநிலையிலும், பங்கு சந்தை வளர்ச்சியடைவது எப்படி: அரவிந்த் கேள்வி

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து கொண்டே நிலையில், பங்கு சந்தை மட்டும் எப்படி உயர்ந்துகொண்டே வருகிறது என மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நுகர்வோர் பணவீக்கம் தொடர்பான ஆய்வுகள் வெளியாகின. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.54 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல, உணவு பணவீக்கம் 10.01 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.

பொருளாதாரம் மந்தநிலையிலும், பங்கு சந்தை வளர்ச்சியடைவது எப்படி: அரவிந்த் கேள்வி 1
அரவிந்த் சுப்பிரமணியன்

கடந்த அக்டோபர் மாதம் வெளியான தொழில் துறை உற்பத்தி தொடர்பான ஆய்வுகளும் உற்பத்தி -3.8 சதவிகிதமாக சரிந்து இருப்பதை சுட்டி காட்டியுள்ளன. மொத்த விலைக் குறியீடு 0.58 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.

அதே போல, தற்போது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் உள்நாட்டு உற்பத்தி தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் 4.5 சதவிகிதமாக குறிப்பிடுகின்றன.

உலகின் டாப் 10 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில், இந்தியாவில் தான் அதிக அளவில் மோசமான கடன் இருக்கின்றன. இந்நிலையில் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் ஆலோசகராக இருந்த அர்விந்த் சுப்ரமணியன், “இந்தியாவில் பொருளாதாரம் மோசமாக இருக்கும் போது, பங்குச் சந்தைகள் மட்டும் ஏற்றம் காண்பது புரியாத புதிராக இருக்கிறது” என்றார். மேலும், இந்தியப் பொருளாதாரம் மேலும் மேலும் தரை தட்டிக் கொண்டிருக்கும் போது, இந்திய பங்குச் சந்தைகள் மேலும் மேலும் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு இருப்பது ஏன்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், சில தினங்களுக்கு முன் பேசிய அரவிந்த் சுப்பிரமணியன், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், உள்கட்டுமானம், வங்கி ஆகிய நான்கு துறைகள்தான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுத்துள்ளதாகவும் அரவிந்த் சுப்ரமணியன் சுட்டிக்காட்டியிருந்தார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்