நடிகர் அர்ஜுன் தாஸ் சைக்கோ கொலையாளியாக நடிக்கும் அநீதி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. டீசருக்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிரைலரை உடனடியாக படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிடப்பட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். அவர் தற்போது முதல் முறையாக ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம் தான் அநீதி. இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், டீசர் வெளியான 3 நாட்களில் டிரைலரையும் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர் படக் குழுவினர் அர்பன் பாய்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் வசந்த பாலன் இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. தெலுங்கு பதிப்பிற்கு “பிளட் அண்ட் சாக்லேட்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெளியான பெருமான் என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். பின்னர் சில குறும்படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த அவருக்கு, 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்தில் இவர் கூறும் “லைஃப் டைம் செட்டில்மெண்ட்” என்ற வார்த்தைக்காகவே இவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். இவரின் குரலும், rugged boy போன்ற தோற்றமும் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. அந்தகாரம், மாஸ்டர், விக்ரம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது லியோ படத்தில் தளபதியுடன் இணைந்து சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். மேலும் பின்னணி பேசுவது, ஆல்பம் வீடியோக்கள் செய்வது என்று இருந்து வந்த அர்ஜுன் தாஸை வைத்து தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்த பாலன் புது படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். அந்த படத்திற்கு அநீதி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். ஜி வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் டீசர் மூன்று நாட்களுக்கு முன்பு வெளியானது. இது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகளை படக் குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். வருகிற ஜூலை 21ஆம் தேதி இந்த திரைப்படம் தமிழகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ட்ரெய்லரை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: