பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொன்னி நதி வீடியோ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த சோழ மன்னர்களின் பெருமையை உணர்த்தும் நாவலாக இருந்தது, எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல். இதை படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் மணிரத்தினம் இறங்கி அதை சாதித்தும் காட்டியிருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 31ஆம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்று இருந்தது. வசூலிலும் பல படங்களை பின்னுக்கு தள்ளி கோடிகளை குவித்து வருகிறது. இதன் முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாவது பாகம் எடுக்கும் பணிகளில் மணிரத்னம் ஈடுபட்டு இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் எழுந்துள்ளது. முதல் பாகத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக த்ரிஷா, அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், வந்திய தேவனாக கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களை தவிர சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தில் ஒவ்வொரு பாடல்களும் வெளியாகி வந்தது் படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பாடல் வரிகளுடன் கூடிய வீடியோவை பட குழு வெளியிட்டு வந்தது. தற்போது படத்தில் இருந்து முழு வீடியோ பாடல்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடலின் முழு வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்தப் பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video.!
Youtube Video Code Embed Credits: Tips Tamil