“வேற லெவல் லோகேஷ் நீங்க”!! கைதி படத்தில் செத்த அர்ஜுன் தாஸ்(அன்பு) இப்படித்தான் உயிரோடு விக்ரம் படத்தில் வந்தார்.

வெளியிட்டது

2019ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மிக பெரிய வரவேற்பையும், 100 கோடி வசூலையும் அசால்ட்டாக செய்த படம் நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி” திரைப்படம். ஒரு இரவில் போதை மருந்து கொடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளை பத்திரமாக ஹாஸ்பிடலில் சேர்க்க முயற்சிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியும், ஜெயில் கைதியும், அந்த நேரத்திற்குள் போலீஸிடம் மட்டிகொண்டு தவிக்கும் தங்களுடைய போதை பொருட்களையும், ரவுடிகளையும் காப்பாற்ற போராடும் மற்றொரு கும்பல் என விறுவிறுப்பாக கதை நகரும். கடைசியில் போலீசை மருத்துவமனையில் சேர்த்து, மொத்த போதை பொருட்களையும் அழித்து தன் மகளுடன் சேர்வார் டிலியான கார்த்தி.

"வேற லெவல் லோகேஷ் நீங்க"!! கைதி படத்தில் செத்த அர்ஜுன் தாஸ்(அன்பு) இப்படித்தான் உயிரோடு விக்ரம் படத்தில் வந்தார். 1

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அன்புவான அர்ஜுன் தாஸ் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நெப்போலியனான ஜார்ஜ் மரியான் பலமாக அடிக்க தரையில் சுருண்டு விழுந்து விடுவார். அப்போது அதை பார்க்கும் அன்புவின் கும்பல் அன்பு பேச்சு மூச்சில்லாமல் கிடக்குறேன், அன்பு செத்துட்டான் என கூறி அழுவார்கள். பின் சிறையில் இருக்கும் அடைக்கலம் டில்லியை பார்த்து “அவனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கு” என கூறுவார். அடுத்த படத்திற்கான லீடை இவ்வாறு வைத்திருந்தார் இயக்குனர் லோகேஷ்.

இப்பொது வெளியாகியுள்ள “விக்ரம்” படத்தில் போதை பொருள் கடத்தும் சந்தானமாக வரும் விஜய் சேதுபதியை கடைசி காட்சியியல் விக்ரமாக வரும் கமல் கொன்றுவிடுவார். போதை பொருள் குடாவுனையும் அழித்து விடுவார். இதனால் கொந்தளிக்கும் சந்தானத்தின் தலைவனான “ரோலெக்ஸாக” வரும் சூர்யா அவர் கீழ் வேலை செய்யும் அனைவரையும் ஒரு இடத்தில அழைத்து பேசுவார். அப்போது முன் வரிசையில் அன்புவாக மீண்டும் அர்ஜுன் தாஸ் நின்று இருப்பார்.

இதனை பார்த்த மக்கள் பலருக்கும் குழப்பம் வந்தது. கைதி படத்துலே செத்து விட்ட அவர் எப்படி இந்த படத்தில் உயிருடன் வந்தார்? என பல்வேறு கேள்விகள் கேட்டுவந்தனர். இதற்கு இப்பொது பதில் கிடைத்துள்ளது. ரசிகர் ஒருவர் கேட்ட இந்த கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது கைதி படத்தில் நெப்போலியன் அடிக்க அன்புவிற்கு தடை மட்டுமே உடைந்து கீழே சரிவார். அதனால் தான் அவர் விக்ரம் படத்தில் உயிருடன் வந்தார். அந்த கதையை தெளிவாக கைதி 2 படத்தில் கூறுகிறேன் என பதிலளித்துள்ளார் இயக்குனர். இதன் மூலம் நடிகர் அர்ஜுன் தாஸ் எப்படி விக்ரம் படத்தில் வந்தார் என்ற குழப்பம் நீங்கி ரசிகர்கள் உள்ளனர்.

அதே போல இந்த பதிலிருந்து அடுத்ததாக அடுத்தாக விஜய் படத்தை முடித்த கையுடன் இவர் கைதி 2 படத்தை இயக்க உள்ளார் என் பது உறுதியாகியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்