மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தற்கு தமிழின் முண்ணனி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி, இயக்குனர்கள் மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் ஏ.ஆர். ரகுமான், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷருக்கான் போன்ற பல விஐபிக்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆறு வருடங்கள் காதலித்து வந்த இருவரும் இன்று சென்னையில் மகாபலிபுரத்தில் ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். ஒரு பதிவில் முதலில் நயன்தாரவை மேடம் என அழைத்ததாகவும், பின்னர் காதம்பரி, தங்கமே, எனது உயிர், கண்மணி ஆகி இன்று என் மனைவி ஆகிவிட்டாய் என்று பதிவிட்டு இருந்தார்.

10 கோவில்களில் இருந்து வந்த புரோகிதர்கள் தாலி எடுத்துக் கொடுக்க இந்து முறைப்படி தாலியை அணிவித்து கணவன் மனைவியாக மாறியுள்ளனர் இருவரும். திருமண விருந்திற்கு பலாப்பழ பிரியாணி தொடங்கி 27 வகையான உணவுப் பொருட்கள் பரிமாறப்பட்டுள்ளன. மேலும் திருமணம் முடிந்த கையோடு 1 லட்சம் ஆதரவற்ற ஏழைகளுக்கு மதிய உணவு அளிக்கவும் நயன்தாரா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் உள்ள முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் வாழும் இல்லங்கள், திருவண்ணாமலை கோவிலை சுற்றி வாழும் ஆதரவற்றோர்கள் ஆகியோருக்கு பல இடங்களில் உணவு வழங்கி மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நயன்தாரா சிவப்பு நிற உடையில் தேவதை போல் தோன்றினார். பின்னர் பட்டு வேஷ்டி குர்தாவில் விக்னேஷ் சிவனும் வர சரியாக 10.25 மணியளிவில் மங்கள வாத்தியங்கள் முழங்க நயன்தாராவுக்கு தாலி கட்டினார் விக்னேஷ் சிவன். பிறகு இருவரும் மாலை மாற்றும் சடங்குகள் நடைபெற்றது. தமிழ் திருமணங்களில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் அம்மி, மிதித்து, அருந்ததி பார்க்கும் நிகழ்வின் போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் காலைத்தூக்கி அம்மியில் வைத்து மெட்டி இடும் போது உணர்ச்சி பெருக்கில் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் நயன்தாரா. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
