நீங்க இல்லாம நா இப்போ இங்க இல்ல”!!”ரொம்ப நன்றி விஜய் & லோகேஷ் அண்ணா”!! உருக்கமாக பதிவிட்டுள்ள அர்ஜுன் தாஸ்!!

வெளியிட்டது

இன்று காலை முதல் வைரலாகி வரும் ஒரு செய்தி நடிகர் அர்ஜுன் தாஸின்  பாலிவுட் அறிமுகமே. 2019ஆம் ஆண்டு வெளியான கைதி படம் முதல் தன்னுடைய காந்த குரல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த அர்ஜுன் தாஸ் தற்போது வடக்கு செல்கிறார். இது சிறிய காலங்களில் வந்த வெற்றியில்லை. 2012ஆம் ஆண்டே “பெருமான்” என்ற படம் மூலம் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். அந்த படம் வரவேற்பை பெற தவறியது.

நீங்க இல்லாம நா இப்போ இங்க இல்ல"!!"ரொம்ப நன்றி விஜய் & லோகேஷ் அண்ணா"!! உருக்கமாக பதிவிட்டுள்ள அர்ஜுன் தாஸ்!! 1

பின்னர் சில தெலுங்கு படங்களிலும் தலைக்காட்டியுள்ள அர்ஜுன் தாஸ் நீண்ட காலமாகவே ஒரு அறிமுகத்திற்காக காத்திருந்தார். அந்த ஏக்கத்தை தீர்த்தது மட்டுமின்றி அவரை மக்களிடம் மிக பெரிய அளவில் கொண்டுசென்ற படம் “கைதி”. 2019ஆம் ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடித்து நடிப்பில் வெளியான இந்த படத்தில் வில்லன் அன்புவாக தோன்றி மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். சிறப்பான வில்லன் நடிகராக நிறைய விருதுகளையும் வென்றார்.

இதன் பின்னர் இயக்குனர் அட்லீ தயாரித்த “அந்தகாரம்” படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். இருப்பினும் அவருக்கு மீண்டும் மக்களிடம் நல்ல பெயரை வாங்கி கொடுத்த படம் நடிகர் விஜய்- லோகேஷ் கூட்டணியில் உருவான “மாஸ்டர்” படம் தான். கொரோனா கட்டுப்பாடுகளால் கொஞ்ச தள்ளி வெளியான இந்த படம் விமர்சக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக பெரிய வரவேற்பை பெற்றது. விஜய், விஜய் சேதுபதி இருபெரும் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும், இந்த படத்திலும் ஜெயிலில் கைதியாக நடிகர் விஜய் சேதுபதியின் கையாளாக நடித்து மிக பெரிய வரவேற்பை பெற்றார்.

இந்த படமும் நல்ல வெற்றியாக அமைய அடுத்து இப்பொது இயக்குனர் பிரபு சாலமனின் “கும்கி 2” மற்றும் வசந்தபாலனின் “அநீதி” என்ற படங்களில் நடித்து வருகிறார். அர்ஜுன் தாஸிற்கு இப்போது மற்றொரு மிக பெரிய வாய்ப்பாக ஹிந்தி படம் கிடைத்துள்ளது. தமிழில் வெளியாகி நிறைய விருதுகளை வென்று குவித்த “KD என்கிற கருப்புதுரை” படத்தை இயக்கிய மதுமிதா இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார்.

மலையாளத்தில் நிறைய அறிமுக நடிகர்களை வைத்து பிரபல இயக்குனர் லிலோ ஜோஷ் பெல்லிசெர்ரி இயக்கத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றியையும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படமான “அங்கமாலி டைரிஸ்” படம். இந்த படத்தின் ரீ-மேக்கில் தான் நடிகர் அர்ஜுன் தாஸ் ஹிந்தியில் நடிக்கவுள்ளார். இந்த சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு, ” எனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகர் விஜய் அண்ணாவிற்கும், இயக்குனர் லோகேஷ் அண்ணாவிற்கும் மிக பெரிய நன்றிகள், நீங்கள் இல்லாமல் இந்த இடத்தில இப்பொது நான் இல்லை” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்