காரை விட்டு இறங்கி சி.ஆர் சரஸ்வதியை சந்தித்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின்.! என்ன காரணம்.!

நடிகையும் அரசியல்வாதியுமான சிஆர் சரஸ்வதியை இன்றைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காரை விட்டு இறங்கி நேரில் வந்து சந்தித்திருக்கும் வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி இருக்கிறது. அதிமுகவில் இருந்த சி ஆர் சரஸ்வதி தற்போது டிடிவி தினகரனின் அமமுகவில் இயங்கி வருகிறார். அவரை முதலமைச்சர் ஏன் சந்தித்தார் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து தற்போது சிஆர் சரஸ்வதி நெகிழ்ச்சியுடன் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர் நடிகை சி ஆர் சரஸ்வதி. இவர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் வெளியில் பேட்டி கொடுத்ததன் மூலமாக பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காரை விட்டு இறங்கி சி.ஆர் சரஸ்வதியை சந்தித்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின்.! என்ன காரணம்.! 1

விளம்பரம்

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக அமமுக என பல அணிகள் பிரிந்த நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாகவும் தற்போது அமமுகவிலும் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த சிஆர் சரஸ்வதியை முதலமைச்சர் தனது காரை விட்டு இறங்கி சந்தித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சரஸ்வதி வசிக்கும் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்குவதாக புகார் எழவே அதை நேரில் விசாரிப்பதற்காக முதலமைச்சர் அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை நிறுத்திய முதலமைச்சர் இறங்கி வந்து சிஆர் சரஸ்வதியிடம் நலம் விசாரித்து சென்றிருக்கிறார். அதற்கு பிறகு பேட்டியளித்த சி.ஆர் சரஸ்வதி நான் தற்போது தான் முதல் முறையாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசுகிறேன்.

தொடர்புடையவை  எழ வெடுத்த நா*ங்களா.! விஜய் டிவி மற்றும் கமலை வெளுத்து வாங்கிய அரசியல் தலைவர்.!

காரை விட்டு இறங்கி சி.ஆர் சரஸ்வதியை சந்தித்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின்.! என்ன காரணம்.! 3

விளம்பரம்

அவர் தனது காரை விட்டு இறங்கி வரவேண்டிய அவசியமே இல்லை, ஆனால் எனக்காக அவர் காரை இறங்கி வந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சிகளை தாண்டி அவரை சந்தித்து பேசியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பது இருக்கிறது என்று சொல்லி நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்திருக்கிறார். 1999 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவர் 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பல்லாவரம் பகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment