நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியும் காதலியுமான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் தற்போது மோனிகாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் மணப்பெண் கோலத்தில் அவர் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் கனா காணும் காலங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் நடிகர் கவின். பின்னாளில் சரவணன் மீனாட்சி என்கிற தொடரில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட கவினுக்கு அங்கு லாஸ்லியாவுடன் காதல் ஏற்பட்டதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் பிக்பாஸை விட்டு வெளியே வந்த பின்னர் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். பிக்பாஸை விட்டு வெளியே வந்த பின்னர் கவினுக்கு வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லிஃப்ட் மற்றும் டாடா ஆகிய இரண்டு படங்களில் நடித்தன் மூலமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார் கவின்.

இதில் டாடா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. தாய் இல்லாமல் வளரும் பிள்ளையை ஒரு தந்தையால் வளர்க்க முடியும் என்று ஆணித்தரமான ஒரு கருத்தை டாடா திரைப்படம் பதிவு செய்திருந்தது. பலரும் இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்து வந்தனர். மேலும் வசூலையும் வாரிக் குவித்திருந்தது டாடா திரைப்படம்.
Kavin's Bride Monica David❤️ pic.twitter.com/fE0Hz3WjRO
— Viral Briyani (@Mysteri13472103) August 2, 2023
இந்த நிலையில் சில நாட்களாக கவினுக்கும் அவரது தோழி மோனிகாவிற்கும் திருமணம் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி தொடங்கியது.வருகிற ஆகஸ்ட் இருபதாம் தேதி தனது தோழியும் நீண்ட கால காதலியுமான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியானது. மேலும் மோனிகா பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் மாடல் துறையிலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Kavin's Bride Monica David❤️ pic.twitter.com/TTYQfgCt6p
— Viral Briyani (@Mysteri13472103) August 2, 2023
இந்த நிலையில் இன்றைக்கு மோனிகாவின் இரண்டு வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கிறது. அதில் திருமணக் கோலத்தில் அவர் எடுத்துக் கொண்ட வீடியோக்கள் கவின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த கவின் ரசிகர்கள் பொண்ணு ரெடி மாப்பிள்ளை எங்கே? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்..!