80 வயசு கிழவன் மாதிரி காட்டி இருக்கானுங்க.! ஜெயிலர் படத்தின் ட்ரைலரை வறுத்து எடுத்த பயில்வான்.!

நேற்று வெளியான ஜெயிலர் ட்ரைலர் பற்றி தற்போது பயில்வான் ரங்கநாதன் தனது காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். ரஜினியை 80 வயது கிழவர் போல இருக்கிறார் என்று சொல்லி அவர் தனிப்பட்ட தாக்குதல்களிலும் ஈடுபட்டு இருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் பயில்வானுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு பக்கா ஆக்ஷன் கலந்த மாஸ் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். இந்த ட்ரைலரைப் பார்க்கும்பொழுது ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வருகிற 10-ஆம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலரை படக் குழுவினர் வெளியிட்டிருந்தனர். ரஜினி ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் இந்த ட்ரைலரை தற்போது பயில்வான் ரங்கநாதன் வறுத்து எடுத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

80 வயசு கிழவன் மாதிரி காட்டி இருக்கானுங்க.! ஜெயிலர் படத்தின் ட்ரைலரை வறுத்து எடுத்த பயில்வான்.! 1

விளம்பரம்

சினிமா விமர்சகரும் பத்திரிக்கையாளராக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் திரைத்துறையைச் சேர்ந்த பலரின் விவகாரமான விஷயங்களை எடுத்து பேசி பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு நபராக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் பயில்வான் நேற்று ஜெயிலர் படத்தின் டிரைலரை பார்க்க அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் டிரைலரை பார்த்ததும் ரசிகர்களின் தலை தொங்கிவிட்டது. ட்ரைலர் படு கேவலமாக இருந்தது. ட்ரைலர் தான் ஒரு படத்திற்கு பூஸ்ட் போல, ஆனால் ரஜினிகாந்தை ஷூ பாலிஷ் போட வைத்திருக்கிறார் நெல்சன். இனி பேச்சு கிடையாது வீச்சு என்று சொல்லிவிட்டு ஒரு கையில் துப்பாக்கி அருவாளுடன் இருக்கிறார். மேலும் ரஜினிகாந்தின் முகத்தில் வயதான தோற்றம் தெரிகிறது. சிங்கம் போல இருந்த மனிதரை இப்படி கேவலமாக காமிச்சி இருக்கீங்களே இது நியாயமா என்று கேட்டார்.

தொடர்புடையவை  லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் செம்ம Vibe பண்ணும் தளபதி.! புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ்.! இதோ போட்டோ.!

80 வயசு கிழவன் மாதிரி காட்டி இருக்கானுங்க.! ஜெயிலர் படத்தின் ட்ரைலரை வறுத்து எடுத்த பயில்வான்.! 3

விளம்பரம்

கார்த்திக் சுப்புராஜ் தனது படத்தில் ரஜினியை இளமையாக காட்டியிருந்தார். ரஜினிக்கு வயசானது அனைவருக்கும் தெரியும். ஆனால் 72 வயது ரஜினியை 80 வயது கிழவன் போல் கேவலமா காட்டி இருக்கிறீர்களே. இது சரியா? மேலும் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா போன்றவர்களை ட்ரைலரில் காட்டவே இல்லை. மற்ற நடிகர்களை ரஜினி இருட்டடிப்பு செய்ய சொன்னாரா? அல்லது சன் பிக்சர்ஸ் சொல்லுச்சா? பீஸ்ட் படத்தில் திரைக்கதையை கோட்டை விட்டது போல ட்ரைலரிலும் கோட்டை விட்டுட்டீங்கன்னு நெல்சன் என்று கடுமையாக சாடி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Recent Voice

விளம்பரம்

Leave a Comment