Categories: சினிமா

அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த திரில்லர் திரைப்படம்.! ‘ரசவாதி’ டீசர் வெளியானது.!

வெளியிட்டது

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிதாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ரசவாதி’. இந்த திரைப்படத்தை ‘மௌனகுரு’,’மகாமுனி’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சாந்தகுமார் இயக்கியிருக்கிறார். தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்வசந்தபாலன் இயக்கிய ‘அநீதி’ படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது ‘கைதி’ தான். இந்த படத்தில் இவரது குரலுக்காகவே பலரும் ரசிகர்களாக மாறிப் போயிருந்தனர். இவர் சொல்லும் “லைஃப் டைம் செட்டில்மெண்ட்” என்கிற வசனமும் மிகப் பிரபலமானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த திரில்லர் திரைப்படம்.! 'ரசவாதி' டீசர் வெளியானது.! 1
தொடர்ந்து ‘அந்தகாரம்’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக நடித்த ‘அநீதி’ என்கிற சைக்கோ த்ரில்லர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ரசவாதி’. இந்தப் படத்தை ‘மௌனகுரு’ படத்தை இயக்கிய இயக்குனர் சாந்தகுமார் இயக்க, க்ரைம் ரொமான்டிக், ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அர்ஜுன் தாஸுடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், ரம்யா சுப்பிரமணியம், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார்.


எந்த ஒரு வசனமும் இல்லாமல் வெறும் பின்னணி இசையை மட்டுமே கொண்டு இந்த டீசர் வெளியாகி உள்ளது. வித்தியாசமான த்ரில்லர் கதையம்சத்துடன் இந்த கதை உருவாகி இருப்பதாக தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த டீசரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Divo Music

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்