சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் இன்று தனக்கு பிறந்த இரண்டாவது மகளுக்கு பிரம்மாண்டமாக பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கிறார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். காயத்ரி நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி, பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்ததன் மூலமாக நடிகையாக அறிமுகமானவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ‘அரண்மனை கிளி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’, ‘அழகி’, ‘பொன்னூஞ்சல்’, ‘களத்து வீடு’, ‘மெல்லத் திறந்தது கதவு’ போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் நடனம் பயின்ற போது மாஸ்டராக இருந்த யுவராஜையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே தருண் என்கிற மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் காயத்ரி. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்திருந்தார். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் ‘மீனாட்சிப் பொண்ணுங்க சீரியலை விட்டு விலகி இருந்தார்.

சமீபத்தில் அவருடைய குடும்பத்தினர் அவருக்கு வளைகாப்பு நடத்தியிருந்தனர். அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது தனது மகளின் முகத்தை முதல்முறையாக காட்டியும் மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியும் இருக்கிறார் காயத்ரி யுவராஜ். அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தொட்டில் மற்றும் வீட்டில் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்தி இருக்கிறார்.

அந்த வீடியோவிற்கு லைக்களும் குவிந்து வருகிறது. தனது கணவர் ‘யுவராஜ்’பெயரின் முதல் எழுத்து ‘யு’ மற்றும் தனது பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களான ‘கா’ என்றையும் சேர்த்து ‘யுகா’ என்று பெயர் வைத்திருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Gayathri from Aminjikarai