விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த பூர்ணிமா தற்போது வெளியே வந்தவுடன் நேராக கேப்டன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் உலகில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். அரசியல் உலகிலும் எதிரிகளையே சம்பாதிக்காமல் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 28ம் தேதி எதிர்பாராத விதமாக காலமாகி இருந்தார். எப்போதும் வழக்கமான சிகிச்சைக்காக செல்லும் அவர் மீண்டு வருவது வழக்கமாக இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முறை அவர் மீண்டு வரவே இல்லை. காலம் அவரை எடுத்துக் கொண்டது. அவர் இறந்து எட்டு நாட்கள் ஆன நிலையில் பலரும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள கேப்டனின் நினைவிடத்திற்கு சென்றும், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றும் அஞ்சலி செலுத்தியும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்கள் கூறியும் வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து நேற்றைய தினம் வெளியேறிய பூர்ணிமா, கேப்டன் மறைந்ததை தெரிந்துகொண்டு நேராக அவரது சமாதிக்கி சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

கேப்டனின் நினைவிடத்தில் கற்பூரம் காட்டி வழிபட்ட அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. பலரும் பூர்ணிமாவின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..!கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: News Tamil 24×7