வீடியோ காலில் ஆவது என் புள்ளையை என்கிட்டே காட்டு திவ்யா.! தந்தை பாசத்தில் தவிக்கும் அர்னவ்.!

வெளியிட்டது

ஊரில் உள்ள பல குழந்தைகளை தான் தூக்கி விளையாடி இருப்பதாகவும், ஆனால் என்னுடைய குழந்தையையே என்னால் தூக்க முடியாத நிலைமை உருவாகி இருப்பதாகவும் வீடியோ காலில் ஆவது என்னுடைய குழந்தையை காட்டுமாறு நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு நடிகர் அர்னவ் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய அவர் கண்ணீர் மல்க இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறார்.

வீடியோ காலில் ஆவது என் புள்ளையை என்கிட்டே காட்டு திவ்யா.! தந்தை பாசத்தில் தவிக்கும் அர்னவ்.! 1

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் ஏற்கனவே கன்னட சீரியல் நடித்து வந்தார். இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் மகராசி மற்றும் கேளடி கண்மணி ஆகிய நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். கேளடி கண்மணி நாடகத்தில் நடித்த தொடங்கிய போது இவருக்கும் நடிகர் அர்னவுக்கும் காதல் மலர்ந்தது் திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கும் செய்தியை மறைத்து நடிகர் அர்னவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


அர்னவ் முஸ்லிம் என்பதால் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார் நடிகை திவ்யா. திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இங்கிருந்து பிரச்சினைகள் ஆரம்பித்தது. அர்னவ் தன்னுடைய வீட்டிற்கு தெரியாமல் தன்னை திருமணம் செய்து கொண்டு விட்டதாலும், தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்ததால் அர்னவ் தன்னிடம் பிரச்சனை செய்வதாகவும், மேலும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் நடிகை உடன் இணைந்து கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் மிகப்பெரிய புகார் ஒன்றை கூறியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க வற்புறுத்தி பேரம் பேசியதாகவும் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். இதனால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார். தொடர்ந்து கைதான அர்னவ் சில காலம் ஜெயிலில் இருந்தார். தற்போது வெளியில் வந்திருக்கும் அவர் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.


அந்த பேட்டியில் பேசிய அவர் திவ்யாவிற்கு தற்பொழுது பெண் குழந்தை பிறந்து இருக்கும் செய்தி குறித்து பேசத் தொடங்கினார். ஊரில் உள்ள பல குழந்தைகளை தூக்கி வைத்து நான் விளையாடுவேன், ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாத நிலைமையில் நான் இருக்கிறேன். நேரில் சென்று பார்க்கக்கூட முடியவில்லை, பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அது தவிர திவ்யாவும் எப்படி அதற்கு ரியாக்ட் செய்வார் என்று தெரியவில்லை. அதனால் வீடியோ காலில் ஆவது தன்னுடைய குழந்தையை தனக்கு காட்டுமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்