அமுதவாணன் என்ன லவ் பண்றாருனு நீங்க எப்படி சொல்லலாம்? ஜனனி கேட்ட கேள்வி, கையெடுத்து கும்பிட்ட ஸ்ருதிகா.!

கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிக்பாஸ் பிரபலம் ஜனனி தற்போது சிம்பு போல மிமிக்ரி செய்து பேசியிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி மூலமாக பல நகைச்சுவை கலைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இன்று சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் புகழ், பாலா, ராமர், நாஞ்சில் விஜயன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரையும் வைத்து கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி. மூன்று சீசன்களை முடித்த இந்த சாம்பியன்ஸ் நிகழ்ச்சி, தற்போது நான்காவது சீசனை நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமுதவாணன் என்ன லவ் பண்றாருனு நீங்க எப்படி சொல்லலாம்? ஜனனி கேட்ட கேள்வி, கையெடுத்து கும்பிட்ட ஸ்ருதிகா.! 1
இந்த சீசனில் நடுவர்களாக பாக்கியலட்சுமி நாடகத்தில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வின்னராக வந்த ஸ்ருதிஹா, மதுரை முத்து, தாடி பாலாஜி இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக குக் வித் கோமாளிலிருந்து விலகி இருந்தார் பாலா. தற்போது அறந்தாங்கி நிஷாவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ராமராஜன், பாக்கியராஜ் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளை நடுவர்களாகவும் அழைத்து வந்திருக்கின்றனர். தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் சீசன் சிக்ஸில் போட்டியாளர்களாக இருந்த தனலட்சுமி, ஜனனி மற்றும் அமுதவாணன் ஆகியோர் போட்டியாளர்களாக வந்திருந்தனர். ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் தனலட்சுமியும அறந்தாங்கி நிஷாவும் பிராங்க் செய்து கொண்டிருந்த நிலையில் ரேஷ்மா கடுப்பாகி எழுந்து வெளியே சென்றிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  முத்து - மீனாவை வீட்டை விட்டு அடித்து துரத்திய விஜயா.! விஜயாவுக்கு அண்ணாமலை கொடுத்த ஷாக்.!

அமுதவாணன் என்ன லவ் பண்றாருனு நீங்க எப்படி சொல்லலாம்? ஜனனி கேட்ட கேள்வி, கையெடுத்து கும்பிட்ட ஸ்ருதிகா.! 3

இந்த நிலையில் மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மிமிக்ரி கலைஞராக இருக்கும் அசார் மிமிக்ரி செய்து காட்டிக் கொண்டிருக்க, அதை பார்த்துவிட்டு ஜனனியும் சிம்பு போல பேசுகிறார். காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment