Categories: சினிமா

தயவுசெஞ்சி இதையெல்லாம் கொஞ்ச மாத்திடுங்க!!மணிரத்னம் தலையில் இடியை இறக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!!அடுத்தடுத்து சோதனையில் பொன்னியின் செல்வன்!!!

வெளியிட்டது

தயவுசெஞ்சி இதையெல்லாம் கொஞ்ச மாத்திடுங்க!!மணிரத்னம் தலையில் இடியை இறக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!!அடுத்தடுத்து சோதனையில் பொன்னியின் செல்வன்!!! 1

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் மணிரத்னம். 1980 முதல் 2000ஆம் ஆண்டுகளில் அசுர பாய்ச்சலில் இருந்தார். மௌனராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, அலைபாயுதே, திருடா திருடா, தில் சே, பம்பாய், அஞ்சலி,  ரோஜா என இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி படங்கள். சில ஆண்டுகளாக இவருடைய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. விமர்சன ரிதியாக நன்றாக இருந்தும், வசூல் ரிதியாக தோல்வி அடைந்தன.

நடுவில் ஓ காதல் கண்மணி மற்றும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்க சிவந்த வானம் இரண்டு படங்களும் நல்ல வெற்றியை அடைந்தன. அந்த வெற்றி கொடுத்த ஊக்கத்தில், நீண்ட ஆண்டுகளாக இவர் எடுக்கவேண்டும் என ஆசைப்பட்டு வந்த கல்கி’யின் பொன்னியின் செல்வன் நாவலை தற்போது படமாக எடுத்துள்ளார்.

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், பிரகாஷ் ராஜ் என நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் இந்த படம் பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. மணிரத்னம் இயக்கம் இந்த படத்தை அவரே தன்னுடைய மெட்ராஸ் டக்கிஸ் சார்பில் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்க்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைக்கிறார். அப்போது பின்னணி இசை சேர்ப்பு பணியில் அவர் ஈடுபட்டிருக்கும் போது படத்தின் சில காட்சிகளை பார்த்து விட்டு, “கொஞ்ச முடிஞ்சா இந்த காட்சிகளை மாற்றிவிடுங்கள், இல்லையேல்…” என கூறி தன்னுடைய பணியை முடித்து கொடுத்துள்ளார்.

இயல்பாகவே இனிமேல் ஒரு சரித்திர காலத்து படங்கள் வெளியானால் அது ராஜமௌலியின் “பாகுபலி” படங்களுடன் ஒப்பிட்டி பார்க்கப்படும். அண்ட் அளவிற்கு அந்த படம் ஒரு பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இன்று வரை பல பாலிவுட் இயக்குனர்களும், நாயகர்களும் அந்த படத்தை தாண்டி ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார்கள்.

அதே போல சில காலம் முன்பு தமிழ் சினிமாக்கள் இந்திய திரையுலகில் பெரிய ஆளுமையை கொண்டு இருந்தது. ஆனால் இப்பொது தெலுங்கு மொழி படங்கள் பல இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. பாகுபலி படத்திற்கு பிறகு தெலுங்கில் தோல்வி அடைந்தாலும் பிரபாஸின் சாகோ படம் ஹிந்தி மொழியில் மட்டும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அண்மையில் வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்களும் மிக பெரிய வசூலை செய்தது. கன்னட மொழி படமான கே.ஜி.எஃப்  படம் இந்திய திரை உலகையே பிரமிக்க வைத்து 1000 கோடியை தாண்டி இன்னுமும் வசூல் செய்து வருகின்றன.

இதனால் இப்பொது தமிழ் திரையுலகிற்கு பெரிய சவால் உள்ளது. இவ்வாறான படங்களை எங்களாலும் கொடுக்க முடியும் என காட்ட, ஒரூ மாபெரும் வெற்றி படம் தேவைப்படுகிறது. அந்த நெருக்கடி இயற்கையாகவே இப்பொது பொன்னியின் செல்வனுக்கு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களை தாண்டி பல விநியோகிஸ்தர்களும், சினிமா ஊடகவியலாளர்களும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த நெருக்கடிகளை சமாளித்து இயக்குனர் மணிரத்னம் என்ன செய்ய போகிறார்? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே எடிட்டிங்கின் போது படம் பார்த்த மணிரத்னத்திற்கே சில காட்சிகளை இன்னும் மெருகேற்றிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதாக கூறப்படுகிறது. இப்பொது ரஹ்மானும் அதே போல கூற அவர் பெரிய குழப்பத்தில் ஆழுந்துள்ளார்.

ஆனால் இத்தனை தயரிப்பு நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. சில காட்சிகளின் கிராபிக்ஸ் பற்றியே ரஹ்மான் கூறியதாகவும், அதனை சரி செய்யும் பணியில் மணிரத்னம் உள்ளதாகவும், மற்ற படி ரஹ்மானிற்கு படம் மிகவும் திருப்தியாக உள்ளதாகவும் அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சீயான் விக்ரமின் போஸ்டர் பெரிய விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. சிறிது நேரத்திலேயே படகுழுவினர் அந்த போஸ்ட்டரை நீக்கி விட்டனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்