4 இயக்குனர்கள், 4 கதைகள், 4 பாதிக்கப்பட்டவர்கள்..மரண பீதியாக வெளியானது Victim ட்ரைலர்

கொரோனா லாக் டவுனினால் பாதிக்கப்பட்ட திரை உலகினருக்கு வரப் பிரசாதமாக வந்தது தான் ஓடிடி தளம். லாக் டவுனால் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் ஓடிடி தளத்தில் வீட்டில் இருந்தபடியே படங்களை பார்க்கும் வசதி இருந்ததால் இந்த தளங்களுக்கான மவுசு அதிகரித்தது. ஆரம்பத்தில் திரைப்படங்கள் மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், தற்போது வெப் சீரிஸ்களும் வெளியாக ஆரம்பித்துள்ளது. அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் ஓடிடி தளங்கள் தற்போது வெப் சீரிஸ்களை போட்டி போட்டு வாங்கி வெளியிட்டு வருகின்றனர். அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் ராக்கர்ஸ் என்ற தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்த ஒரு தொடரும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு விறுவிறுப்புடனும் பல திருப்பங்களுடனும் வெப் சீரிஸ்கள் இருப்பதால் இதை வாங்கி தங்களது ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். கீழே உள்ள ட்ரைலர் வீடியோவை பார்க்கவும்.

4 இயக்குனர்கள், 4 கதைகள், 4 பாதிக்கப்பட்டவர்கள்..மரண பீதியாக வெளியானது Victim ட்ரைலர் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே வெப் சீரிஸ்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் வெப் சீரிஸ் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் தமிழில் வெளியான சுழல் என்ற வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக விக்டிம் ஹூ இஸ் நெக்ஸட் (Victim – who is next) என்ற புதிய தொடர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் பல கதைகளை ஒன்றாக இணைத்து ஒரே கதையாக எடுக்கப்படும் தொடராக இது இருக்கிறது. தமிழில் கடைசியாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ஆந்தாலாஜி படம் பாவக்கதைகள்.

தொடர்புடையவை  உடல் எடை குறித்த கேள்வி..! ரசிகரை திட்டிய நடிகை சமந்தா..!

4 இயக்குனர்கள், 4 கதைகள், 4 பாதிக்கப்பட்டவர்கள்..மரண பீதியாக வெளியானது Victim ட்ரைலர் 3

விளம்பரம்

அடுத்தபடியாக தற்போது இந்த தொடர் வெளியாக இருக்கிறது. இது sony லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரசன்னா, அமலாபால், ப்ரியா பவானி சங்கர், நாசர், தம்பி ராமையா, நட்டி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு, பா ரஞ்சித், சிம்பு தேவன், ராஜேஷ் நான்கு இயக்குனர்கள் இணைந்து இந்த தொடரை இயக்கியுள்ளனர். இந்த தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. செம திரில்லிங்காக இருக்கும் இந்த படத்தின் டிரைலரை நீங்களும் காண… Watch Victim Trailer Below..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sony Liv

விளம்பரம்

Leave a Comment