படம் வெளியான அடுத்த நாளே வெற்றி விழா கொண்டாடிய தி வாரியர் படக்குழு..கேக் வெட்டி கொண்டாட்டம்

ஒரு காலத்தில் தரமான படங்களை இயக்கி பெயர் பெற்ற ஒரு இயக்குனர் லிங்குசாமி. இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படத்தை இயக்கினார். இன்றுவரை இந்த படம் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருந்தது. இதன் பின்னர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் முன்னணி நடிகரான சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. பின்னர் விஷாலை வைத்து சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை் பின்னர் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த அவர் மிகப்பெரிய இடைவேளைக்கு பின்னர் தி வாரியர் என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியிருந்தார்.

படம் வெளியான அடுத்த நாளே வெற்றி விழா கொண்டாடிய தி வாரியர் படக்குழு..கேக் வெட்டி கொண்டாட்டம் 1

விளம்பரம்

தி வாரியார் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய லிங்குசாமி தான் மிகவும் கடனால் அவதிப்பட்டு வருவதாகவும், தன்னுடைய வீடு மற்றும் கார் அனைத்தும் கடனில் போய்விட்டதாகவும், இருப்பினும் நான் நல்ல நண்பர்களை சம்பாதித்து வைத்திருக்கிறேன் அவர்களால் தான் என்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்று கண்கலங்கி பேசினார். இந்த நிலையில் தி வாரியர் படம் ஜூலை 14ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கீர்த்தி செட்டி, நடிகர் ஆதி போன்ற பலர் நடித்திருந்தனர். இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் வந்த சிம்பு பாடிய புல்லட் பாடல் மிகப் பிரபலம். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் எகிறி இருந்தது.

தொடர்புடையவை  அடுத்த சம்பவத்திற்கு குறி வைக்கும் விஜய் சேதுபதி!! தூது விட்டு காத்திருக்கும் இயக்குனர் ஹெச்.வினோத்!!!

படம் வெளியான அடுத்த நாளே வெற்றி விழா கொண்டாடிய தி வாரியர் படக்குழு..கேக் வெட்டி கொண்டாட்டம் 3

விளம்பரம்

புல்லட் பாடலுக்காகவே இந்த படம் பார்க்க வேண்டும் என்று பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை என்றே கூறப்படுகிறது. படம் வெளியாகி அடுத்த நாளே இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது சலசரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் ஒருவருக்கொருவர் கேக் வெட்டி பரிமாறிக் கொள்ளும் வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த சக்சஸ் பாட்டியை பலரும் கலாய்த்து வருகின்றனர். பொதுவாக படம் வெளியாகி ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து தான் வெற்றியை கொண்டாடுவார்கள். ஆனால் வாரியார் படம் வெற்றி பெற்றதாக நினைத்து படம் வெளியான அடுத்த நாளே வெற்றி விழா கொண்டாடி உள்ளது நெட்டிசன்கள் பலரும் மரணமாக கலாய்த்து வருகின்றனர். Watch the below video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: TelguCinema Brother

விளம்பரம்

Leave a Comment