லேடி ரோலக்ஸ் ஆகிறார் சமந்தா..லோகேஷ் செய்ய இருக்கும் தரமான சம்பவம்..தளபதி 67 படம் பற்றி வெளியான புது அப்டேட்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்ன தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் கமலை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் 450 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்துள்ளது. இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பலரும் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை அனைத்து முன்னணி நடிகர்களும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து தளபதி 67 எந்த படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் மற்றும் மும்முரமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் பேட்டி அளித்திருந்த லோகேஷ் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு வந்தவுடன் படத்திற்கான வேலைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.

லேடி ரோலக்ஸ் ஆகிறார் சமந்தா..லோகேஷ் செய்ய இருக்கும் தரமான சம்பவம்..தளபதி 67 படம் பற்றி வெளியான புது அப்டேட் 1

விளம்பரம்

தொடர் வெற்றிகளை தொடர்ந்து அவர் கைவசம் கைதி 2, விக்ரம் 2, தளபதி 67, இரும்புக்கை மாயாவி என நான்கு படங்கள் உள்ளன. இதில் அவர் முதலில் இயக்க உள்ள படம் தளபதி 67. விஜய் தற்போது தளபதி 66 படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தின் விரைவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தளபதி 67 படம் குறித்த ஒரு செய்தி கசிந்துள்ளது. தனது படங்களில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் வழக்கம் போல விஜய் படத்தில் வரும் ஆண் வில்லன் போல இல்லாமல் இந்த படத்தில் பெண் வில்லன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடையவை  குடும்பம் ஒற்றுமையா இருக்கணும்னு படத்துல பேசுறீங்க.! ஆனா வனிதாவை மட்டும் ஒதுக்கி வச்சி இருக்கீங்க? பதில் சொல்லாமல் சென்ற அருண்விஜய்

லேடி ரோலக்ஸ் ஆகிறார் சமந்தா..லோகேஷ் செய்ய இருக்கும் தரமான சம்பவம்..தளபதி 67 படம் பற்றி வெளியான புது அப்டேட் 3

விளம்பரம்

இந்தப் பெண் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் நடத்தப்பட்டதாகவும் அவரும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சமந்தா ஏற்கனவே ஃபேமிலி மேன் என்ற வெப் தொடரில் வில்லியாக நடித்திருந்தார். விஜயுடன் இணைந்து கத்தி, தெறி, மெர்சல் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள சமந்தா முதன்முறையாக விஜய்க்கு வில்லியாக நடிக்க இருக்கிறார். கண்டிப்பாக அவர் வில்லியாக மிரட்டிவிடுவார் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் சமந்தா மற்றும் விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார் லோகேஷ் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

லேடி ரோலக்ஸ் ஆகிறார் சமந்தா..லோகேஷ் செய்ய இருக்கும் தரமான சம்பவம்..தளபதி 67 படம் பற்றி வெளியான புது அப்டேட் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment