“பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க” தந்தைக்கு ஆதரவாக பதிவிட்ட AR ரஹ்மான் மகள் கதீஜா.!

வெளியிட்டது

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஏ.ஆர் ரகுமானின் இசை விழாவில் நடந்த குளறுபடிகளுக்கு தன் தந்தை மீது எந்த தவறும் கிடையாது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தான் தவறு என்று ஏ.ஆர் ரகுமானின் மகள் கதீஜா தற்போது காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”நேற்று இரவு முதல் அனைத்து மீடியா மற்றும் சமூக வலைதளங்களில் ஏ.ஆர் ரகுமான் ஒரு மோசடி செய்பவர் என்று தரம் தாழ்ந்த அரசியலை சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான். ஆனால் அவர்கள் செய்த தவறுக்காக ஏ.ஆர் ரகுமான் பொறுப்புகளை தானே ஏற்றுக் கொண்டார்.

"பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க" தந்தைக்கு ஆதரவாக பதிவிட்ட AR ரஹ்மான் மகள் கதீஜா.! 1

2016 ஆம் ஆண்டு ‘நெஞ்சே எழு’ என்கிற கான்சர்ட் சென்னை, மதுரை, கோவையில் நடந்தது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோல் 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்காக வெளிநாடுகளில் கான்சர்ட் நடத்தி உதவி செய்யப்பட்டது. அதேபோல 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு உதவிகளும் தேவையான பொருட்களையும் வழங்கினார் ஏ.ஆர் ரகுமான். 2022 ஆம் ஆண்டு ஒரு கான்சர்ட்டை ஏற்பாடு செய்து லைட் மேன் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக இலவசமாக கான்சர்டை நடத்தி முடித்து இருந்தார் ஏ.ஆர் ரகுமான்.

நீங்கள் பேசுவதற்கு முன்பு இதையெல்லாம் யோசித்துப் பார்த்துவிட்டு பேசுங்கள்” என்று சொல்லி உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த தவறுக்கு தான் பலிகடா ஆகிறேன் என்றும், இது போன்ற தவறு இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் ஏ.ஆர் ரகுமான் சமீபத்தில் பதிவு ஒன்றைப் போட்டு இருந்தார். தொடர்ந்து அவரது மகள் கதீஜாவும் இப்படி ஒரு பதிவை பதிவிட்டு தனது தந்தைக்கு ஆதரவாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Twitter Original Source From: Khatija Rahman

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்