“ஒரு சக கலைஞனாக நான் A.R ரஹ்மான் பக்கம் நிற்கிறேன்” ஆதரவு தெரிவித்து யுவன் வெளியிட்ட அறிக்கை

இந்த கடுமையான சூழலில் ஏ ஆர் ரகுமானுடன் துணை நிற்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், “ஒரு பிரம்மாண்டமான இசை கச்சேரியை நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அது பல பகுதிகளை உள்ளடக்கியது. போக்குவரத்து தொடங்கி கூட்டத்தை கட்டுப்படுத்துவது என பல விஷயங்களை உள்ளடக்கியது. ஒருங்கிணைப்பு செய்பவர்களின் குளறுபடிகள், அதிக கூட்ட நெரிசல் உட்பட எதிர்பாராத பிரச்சினைகள் இசை நிகழ்ச்சிகளின் போது நடக்கின்றது. இசையமைப்பாளர்களின் நோக்கங்கள் சரியாக இருந்த போதிலும் பல விஷயங்கள் தவறாக மாறிவிடுகிறது. இசைக்கு அர்த்தம் கொடுக்கும் எங்கள் ரசிகர்களுக்கு இதனால் சில அழுத்தங்கள் ஏற்படுகிறது.

"ஒரு சக கலைஞனாக நான் A.R ரஹ்மான் பக்கம் நிற்கிறேன்" ஆதரவு தெரிவித்து யுவன் வெளியிட்ட அறிக்கை 1

விளம்பரம்

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களும் தயாரிப்பாளர்களும் இதை கருத்தில் கொள்வது அவசியம். நடிகர்கள் என்கிற முறையில் நாங்கள் தயாரிப்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம். அனைத்தும் சீராக நடப்பதையும், எங்கள் ரசிகர்கள் நலமாக இருப்பதையும் நீங்கள் உறுதி செய்யுங்கள். மேடையில் இருப்பதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். இது உண்மையிலேயே வருத்தமான சூழ்நிலை தான். திட்டமிடுதல் தொடங்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களில் தீவிர கவனம் செலுத்த நான் உப்பட அனைத்து கலைஞர்களுக்கும் இந்த சம்பவம் எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது. ஒரு சக கலைஞராக நான் இந்த நேரத்தில் ஏ.ஆர் ரகுமான் உடன் துணை நிற்கிறேன்.

தொடர்புடையவை  40 ஆண்டு கால நண்பனை வீட்டிற்கே சென்று சந்தித்த கமல், லோகேஷ்..என்ன காரணம் தெரியுமா?

"ஒரு சக கலைஞனாக நான் A.R ரஹ்மான் பக்கம் நிற்கிறேன்" ஆதரவு தெரிவித்து யுவன் வெளியிட்ட அறிக்கை 3

விளம்பரம்

ஒரு கச்சேரி என்பது ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவை கொடுக்கும் நோக்கத்தில் தான் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்திலிருந்து பாடங்கள் கற்கப்படுகிறது. மாற்றங்கள் செய்யப்பட்டு எதிர்காலத்தில் ரசிகர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மிகுந்த பாதுகாப்புடனும், கவனத்துடனும் நடத்தப்படுவதை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்வார்கள் என்று நம்புவோம்” என யுவன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

விளம்பரம்

Twitter Original Source From: Yuvan Shankar Raja

விளம்பரம்

Leave a Comment