40 ஆண்டு கால நண்பனை வீட்டிற்கே சென்று சந்தித்த கமல், லோகேஷ்..என்ன காரணம் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பினால் ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்குவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி வெளியாகியுள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக கமல் படங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியாகவில்லை. இதனால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே உள்ளது. கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக அனிருத் இசையமைத்துள்ளார்.

40 ஆண்டு கால நண்பனை வீட்டிற்கே சென்று சந்தித்த கமல், லோகேஷ்..என்ன காரணம் தெரியுமா? 1

விளம்பரம்

ஏற்கனவே வெளியான படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தல பத்தல பாடல் வெளியானது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடலை கமலே எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஆண்டவர் போட்ட குத்து சாங் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிம்பு, இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையவை  இன்று பிறந்தநாள் கொண்டாடும் Manju Warrier..! நேரில் சென்று வாழ்த்து சொன்ன நடிகை Nayanthara..!

40 ஆண்டு கால நண்பனை வீட்டிற்கே சென்று சந்தித்த கமல், லோகேஷ்..என்ன காரணம் தெரியுமா? 3

விளம்பரம்

இந்த நிலையில் படத்தின் இருபாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றன. நடிகர் சூரியாவும் ஒரு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். தற்போது கமல் தனது 40 ஆண்டு கால நண்பனான ரஜினியை சென்று பார்த்துள்ளார். கமல் மற்றும் ரஜினி இருவரின் 40 ஆண்டுகால நட்பு என்னை வியக்க வைக்கிறது என்று லோகேஷ் ட்வீட் செய்துள்ளார். படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பல ப்ரோமோஷன் வேலைகளை ஈடுபட்டு வருகிறார் கமல். அதன் ஒரு பகுதியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டிருந்தார். தற்போது ரஜினியை சென்று சந்தித்துள்ளது கமல் ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Twitter Original Source from: Lokesh Kanagaraj

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment