பர்த்டே Gift.! தங்கலான் படத்திலிருந்து புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

பா ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்திலிருந்து தற்போது மாளவிகா மோகனின் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கின்றனர். மாளவிகா மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது படக்குழுவினர் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றனர். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புகளை துவக்கிய பா ரஞ்சித், இந்த படம் உண்மையான கேஜிஎப் படமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப்பில் நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக பா ரஞ்சித் அறிவித்திருந்தார்.

பர்த்டே Gift.! தங்கலான் படத்திலிருந்து புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு.! 1
இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டக்ரோன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது நிலைவடைந்திருக்கிறது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மாளவிகா மோகனின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழு வெளியிட்டு இருக்கிறது. அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  இலங்கையில் நடக்கும் அரசியல் சூழல் குறித்து கவிஞர் வைரமுத்து.

பர்த்டே Gift.! தங்கலான் படத்திலிருந்து புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு.! 3

அந்த புகைப்படத்தை பகிர்ந்த மாளவிகா மோகனன் இந்த பிறந்த நாளுக்கு இதுதான் என்னுடைய ஸ்பெஷல். தங்கலான் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஆரத்தியின் இந்த கதாபாத்திரத்தை உலகம் விரைவில் பார்க்க வேண்டும் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் பழங்குடி பெண்ணாக நடித்திருக்கிறார். இதுவரை யாரும் பார்க்காத வித்தியாசமான தோற்றத்தில் கையில் கொம்புடன் இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்..!

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment