நடிகர் அருள்நிதி நடித்து வரும் டிமாண்டி காலனி படத்தின் மோஷன் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோவிற்கு தற்போது ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் வருவதாக இருக்கிறார் அருள்நிதி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்று வருகிறார். 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி என்கிற படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து மீண்டும் அருள்நிதியை வைத்து பாகம் இரண்டை எடுத்து இருக்கிறார். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அருள் நிதியை கதாநாயகனாக வைத்து டிமாண்டி காலனி இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார் அஜய் ஞானமுத்து. இந்த படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க, அருண்பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் படக்குழுவினர் கேக் வெட்டி பிரிந்திருந்தனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து மேக்கிங் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் “இருள் ஆளப்போகிறது” என்று மிக பயங்கரமாக அந்த வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் சுடுகாட்டில் கல்லறைகளாக இருக்கிறது. கல்லறையை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே செல்லும்போது இறுதியில் அருள்நிதி கண்களில் ஒருவித ஒளியுடன் பேய் போல அமர்ந்திருக்கிறார். அந்த மோஷன் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்ப்பும் கிடைத்து வருகிறது.

டி ப்ளாக், தேஜாவு, டைரி, திருவின் குரல் என்று தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருள்நிதி. இவர் கடைசியாக நடித்திருந்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் அடுத்த படமாக டிமாண்டி காலனி பாகம் இரண்டில் நடித்திருக்கிறார். இந்த படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Think Music India