அருண் விஜய் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்! இதுதான் காரணமா

வெளியிட்டது

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். “AV 33” எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் யோகி பாபு, ப்ரியா பவானி ஷங்கர், ராதிகா சரத்குமார், புகழ், ‘கே.ஜி.எஃப்’ கருடா ராம், அம்மு அபிராமி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.இந்த படத்தில் அருண் விஜயின் அண்ணனாக பிரபல நடிகரும் வில்லனுமான பிரகாஷ்

அருண் விஜய் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்! இதுதான் காரணமா 1

ராஜ் நடிக்க தேர்வாகி இருந்தார். ஆனால் அவருக்கு தோள்பட்டையில் திடீரென்று காயம் ஏற்பட்டதால் தற்போது ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பரிபூரணமாக குணம் அடைய இன்னும் நாட்கள் ஆகுமாம். தன்னால் படப்பிடிப்பு தாமதம் ஆகக் கூடாது என்றும் அவரால் இப்படத்தில் மேலும் நடிக்க இயலாது என்றும் இயக்குனர் ஹரியிடம் கூறியுள்ளார்.

இதனால் தற்போது அவருக்குப் பதிலாக அண்ணன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் “சமுத்திரகனி” நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமுத்திரகனி பல படங்களில் நடித்து வருகிறார். அருண் விஜய் ‘பாக்சர், அக்னி சிறகுகள், சினம், பார்டர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்