தளபதி விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகை. யார் தெரியுமா?

நீண்ட முயற்சிக்குப் பின்னர் தற்போது தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தன் சிறப்பான நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் சம்பாதித்தவர். அவரின் நடனத்திற்கே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே கூறலாம்.சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் செம ஹிட். தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து

தளபதி விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகை. யார் தெரியுமா? 1

வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவருடன் பல நடிகைகள் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இளம் நடிகைகள். இந்நிலையில் அவருடன் மூன்று படங்களில் நடித்த நடிகை ஒருவர் விஜயுடன் சேர்ந்து மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்
தளபதி விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகை. யார் தெரியுமா? 3

துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் படங்களில் நடித்த ‘காஜல் அகர்வால்’ தான் மீண்டும் விஜய் உடன் படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்த அடிக்கடி விஜய்யை நலம் விசாரித்து வருகிறாராம் என கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது. அவருடன் மூன்று படங்களில் நடித்ததால் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். சமீபத்தில் தான் காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார்.

தொடர்புடையவை  Heroவாக நடிப்பதற்கு முன்பே பாண்டியராஜனோடு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள புரட்சி தளபதி!
தளபதி விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகை. யார் தெரியுமா? 5
விளம்பரம்

Leave a Comment