தமிழ் சினிமாவில் சில நல்ல படங்களை இயக்கிய இயக்குனர்கள் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருகின்றனர். அப்படி இயக்குனராகவும் குணச்சித்திர வேடங்களில் தற்போது நடித்துக்கொண்டிருப்பவர் தான் ராஜ் கபூர் என்பவர். இவர் தமிழ் திரையுலகில் பல படங்களில் வெவ்வேறு சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ராஜ் கபூர் பல படங்களை இயக்கியவர். அப்படி அவர் இயக்கிய வெற்றி படங்கள் நிறைய உள்ளன.

இவர் முதன்முதலில் துணை இயக்குனராக பணிபுரிந்தார். பின்பு 1991ஆம் ஆண்டு இவர் இயக்கிய படம் தாலாட்டு கேட்குதம்மா. இந்த படத்தில் பிரபு, கனகா கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருந்தனர். இந்த படத்தின் இசையை இளயராஜா அவர்கள் அமைத்தார். இவரது முதல் படமே 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

தற்போதைய இளைஞர்களுக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர் தல அஜித். ராஜ் கபூர் இயக்கத்தில் அஜித் இரண்டு படங்கள் வெவ்வேறு கதைக்களத்தில் நடித்துள்ளார். 1998ல் வெளியான அவள் வருவாளா படத்தில் அஜித், சிம்ரன், பப்லு பிரித்விராஜ் ஆகியோர் நடிந்திருந்தனர். இந்த படத்தின் மூலம் அஜித்துக்கு ரசிகர்கள் பெறுக ஆரம்பித்தனர்.

பின்பு 1999ல் ஆனந்த பூங்காற்றே என்ற படத்தில் அஜித், மீனா, கார்த்திக், மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் அஜித்துக்கு தனது சினிமா வாழ்கையில் முக்கிய படமாக அமைந்தது. இப்படி அஜித் மட்டுமல்லாமல் பல நடிகர் நடிகைகளுக்கு நல்ல படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜ் கபூர். இவர் படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களும் இயக்கியுள்ளார்.

மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி தொடரான “நந்தினி” இவர் இயக்கிய தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஜோதி தொடரும் இயக்குனர் ராஜ் கபூர் தான் இயக்கிக்கொண்டிருக்கிறார்.
