Categories: சினிமா

44 வயதில் திருமணம் செய்துகொண்ட அருவி சீரியல் நடிகை லாவண்யா.! இதோ திருமண புகைப்படங்கள்..!

வெளியிட்டது

அருவி சீரியலில் லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை லாவண்யாவிற்கு திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 44 வயதாகும் அவர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 90களின் மத்தியில் இருந்து பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை லாவண்யா தேவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

44 வயதில் திருமணம் செய்துகொண்ட அருவி சீரியல் நடிகை லாவண்யா.! இதோ திருமண புகைப்படங்கள்..! 1

1979 ஆம் ஆண்டு சென்னையில் பிளந்து வளர்ந்த இவர் நடிகர் சரத்குமார் நடித்த சூரியவம்சம் என்கிற படத்தின் மூலமாக தனது திரைப் பயணத்தை தொடங்கினார். இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த போதிலும், இவர் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். தொடர்ந்து அவர் விஜயின் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்திலும், ரஜினியின் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்திலும், கமலின் நடிப்பில் வெளியான தெனாலி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


படையப்பா திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக வரும் சித்தாராவை நாசர் திருமணம் செய்து கொள்ளாமல் லாவண்யாவை தான் திருமணம் செய்து கொள்வார். மேலும் ஊஞ்சல் காட்சிகளில் படையப்பா அமர்ந்திருக்கும் பொழுது அவருக்கு காபி கொண்டு வந்து கொடுக்கும் காட்சிகளிலும் லாவண்யா நடித்திருப்பார். இதுபோல் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்த தொடங்கியவுடன், அவர் சீரியல் பக்கம் தலைகாட்டத் தொடங்கினார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி என்கிற நாடகத்தில் லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் லாவண்யா நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு லாவண்யாவிற்கு திருப்பதியில் வைத்து திருமணம் நடந்து முடிந்துள்ளது. 44 வயதாகும் அவர் தற்போது தான் திருமணத்தை முடித்து இருக்கிறார்.


பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் லாவண்யா. திருப்பதியில் வைத்து நடந்த இந்த திருமணத்திற்கு அருவி சீரியலின் நடிகர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். பெரிய அளவில் யாரையும் அழைக்காமல் மிகவும் சிம்பிளாக இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்களை கூட அவர் பெரிய அளவில் லாவண்யா பதிவிடவில்லை.

அவருடன் நடித்த நடிகர்கள்தான் திருமண புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் லாவண்யாவிற்கு பலரும் திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். Watch the Below Video.! 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்