அடிமைப் படுத்திய வெள்ளைக் காரனை அசுர வேட்டை நடத்திய கெளதம் கார்த்திக்.! 1947 ட்ரைலர் இதோ.!

கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நவரச நாயகன் கார்த்திக்கின் மகன்தான் கௌதம் கார்த்திக். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால் இவருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு படம் தான் 1947. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். இவர் ஏற்கனவே எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான்கராத்தே உள்ளிட்ட படங்களை தயாரித்தார். பின்னர் சில ஆண்டுகளாக எந்த படத்தையும் தயாரிக்காமல் இருந்த அவர், தற்போது இந்த படத்தை தயாரித்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அடிமைப் படுத்திய வெள்ளைக் காரனை அசுர வேட்டை நடத்திய கெளதம் கார்த்திக்.! 1947 ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

இந்தப் படம் ஏ ஆர் முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்த பொன் குமார் இயக்கியுள்ள திரைப்படமாகும். ஏ ஆர் முருகதாஸ் மற்றும் பர்பிள் புல் என்டர்டைன்மென்ட் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. ஆகஸ்ட் 16 1947 என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் சுதந்திரப் போராட்ட சமயத்தில் நடந்த நிகழ்வுகளை தொகுப்பாக கொண்டு, இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய தொலைதூர கிராமத்தில், பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போராடும் கிராமத்தில் வாழ்ந்த போராட்டக்கார்ர்களைப் பற்றிய படமாக இது உள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், படத்தின் டீசரை வெளியிடப்பட்டது. கௌதம் கார்த்திக்கு ஜோடியாக அறிமுக கதாநாயகி நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்க அந்த காலத்து மக்கள் பட்ட துன்பங்களை அழகாக எடுத்துரைக்கிறது இந்த படம்.

தொடர்புடையவை  OTT-யில் வெளியாகும் Demonty Colony 2..! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..! எப்போது தெரியுமா ?

அடிமைப் படுத்திய வெள்ளைக் காரனை அசுர வேட்டை நடத்திய கெளதம் கார்த்திக்.! 1947 ட்ரைலர் இதோ.! 3

விளம்பரம்

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment