சன் டிவி பிரபலம் கோவை குணா உடல் நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார்..| Kovai Guna

பிரபல நகைச்சுவை கலைஞராக இருக்கும் கோவை குணா தற்போது காலமாகி இருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கிறது. உடலில் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது காலமாகி இருக்கும் செய்தி கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும், நகைச்சுவை கலைஞர்கள் ஆகவும் வந்து மக்களை மகிழ்ச்சி படுத்துவதில் வல்லவர்களாக இருப்பவர்கள் சிலரே இருக்கின்றார்கள். அந்த வகையில் கோயம்புத்தூரில் இருந்து கிளம்பி மக்களை மகிழ்விப்பதற்காக சென்னைக்கு வந்த கலைஞர்களில் ஒருவராக இருப்பவர் கோவை குணா. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஸ்ணாடன்டப் காமெடியனாக அறிமுகமானார் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி இன்று இருக்கும் அனைத்து ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியது. 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக இருந்தது என்று சொன்னால் அது அசத்தப்போவது யாரு தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சன் டிவி பிரபலம் கோவை குணா உடல் நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார்..| Kovai Guna 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சிட்டிபாபு மற்றும் மதன்பாப் ஆகியோர் இருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியை விஜே மகேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல முன்னணி நடிகைகள் தொகுத்து வழங்கி இருக்கின்றனர். இன்று விஜய் தொலைக்காட்சியில் அசத்தி கொண்டிருக்கும் மதுரை முத்து கூட இந்த நிகழ்ச்சியில் இருந்து சென்றவர் தான். இது போல பல கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து கலைஞர்களாக உருவாக்கியிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் கோவை குணா. இவர் பல நடிகர்கள் போல மிமிக்கிரி செய்து பேசுவதும் ஸ்டாண்ட் அப் காமெடி செய்வதிலும் கில்லாடி ஆக இருந்தார். மேலும் பெண்கள் வேடமிட்டு வந்து நகைச்சுவை செய்வதிலும் திறமையாளராக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது.

தொடர்புடையவை  ஸ்ருஷ்டி போல மேக்கப் போட படாத பாடு பட்டுள்ள குரேஷி.! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.!

சன் டிவி பிரபலம் கோவை குணா உடல் நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார்..| Kovai Guna 3

விளம்பரம்

கோயமுத்தூரில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது காலமாகி இருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் அவரின் புகைப்படங்கள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மிகவும் ஒல்லியான உடல் தேகத்துடன் அவரது புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அவன் இன்று காலமாகி இருப்பதாக வெளியாகும் தகவல்களால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உறைந்து போயிருக்கின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video..! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment