தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். பில்லா 2 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகி இருந்தார். பின்னர் சூது கவ்வும் படத்தில் கூட்டத்தில் ஒருவனாக நடித்து அசத்தியிருந்தார் அசோக் செல்வன். சினிமாவில் கதாநாயகனாக போராடிய இவருக்கு, தெகிடி படம் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல் அனைவரையும் கவர்ந்து இருந்தது.

இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்தாலும் இவருக்கான வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை. தொடர்ந்து போராடிய இவருக்கு ஓ மை கடவுளே படம் அமைந்தது. இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த போர் தொழில் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார்.

இவர் தான் காதலித்து வந்த நடிகை கீர்த்தி பாண்டியனை அண்மையில் திருமணம் செய்துகொண்டு உள்ளார். இருவரும் தற்போது விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்று உள்ளனர். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
