யுடியூபர் சித்து மற்றும் ஹர்ஷத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து..! டிராகன் படத்தின் போஸ்டர்..!

வெளியிட்டது

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது நாயகனாக சினிமாவில் உருவெடுத்து உள்ளார். இவர் இயக்கி நடித்த லவ் டுடே படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படத்திற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது இப்படத்தை தொடர்ந்து நாயகனாக உருவெடுத்து இருக்கும் இவர் அடுத்தடுத்து நாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.

யுடியூபர் சித்து மற்றும் ஹர்ஷத்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து..! டிராகன் படத்தின் போஸ்டர்..! 1

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த இருபடங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. டிராகன் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் நடிகர்களாக யுடியூர் சித்து மற்றும் ஹர்ஷத்தை அறிமுகம் செய்து உள்ளனர்.

இந்த போஸ்டரை தற்போது இயக்குனர் வெளியிட்டு உள்ளார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.மேலும் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்